Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

என் சிம்ஹா பிறந்து விட்டான்: சுஜா கணவர் மகிழ்ச்சி

22 ஆக, 2019 - 15:27 IST
எழுத்தின் அளவு:
Baby-boy-to-Suja-Sivakar

பிக்பாஸ் புகழ் நடிகை சுஜா வருணிக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கும் தகவலை அவரது கணவர் சிவக்குமார் தெரிவித்திருக்கிறார்.

பிக்பாஸ் தொலைக் காட்சித் தொடரின் முதல் சீசனில், வைல்டு கார்டு என்ட்ரி மூலம் நுழைந்தவர் நடிகை சுஜா வருணி. தன் நீண்ட நாள் காதலர் சிவக்குமாரை, கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதன் பின், நடிப்பதைத் தவர்த்து வந்த சுஜா வருணி, கடந்த இரு மாதங்களுக்கு முன், தான் கர்ப்பமாக இருக்கும் தகவலையும், தனக்கு சிவக்குமார் குடும்பத்தினர் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தியதையும் படங்களுடன் டுவிட்டர் மூலம் பதிவு செய்திருந்தார்.


அப்போது, சிவக்குமாரை தான் கணவராக பெற்றதற்கும், அவரது குடும்பத்தினரை என் குடும்பத்தினரின் சம்பந்தி வீட்டாராக பெற்றதற்கும் இறைவனுக்கு நன்றி சொல்வதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், அவர் மகப்பேருக்காக, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

சுஜா வருணி - சிவக்குமார் தம்பதிக்கு நேற்று இரவு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. அந்தத் தகவலை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருக்கும் சிவக்குமார், என் சிம்ஹா வந்து விட்டான். இந்த நாளை என்னால் மறக்க முடியாது. இந்த நாளில் தான், நான் நடிக்கும் பிங்கர் டிப் என்ற வெப் சீரிசும் தொடங்குகிறது என குறிப்பிட்டிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
சாஹோ படத்தின் முதுகெலும்பு இயக்குநர் சுஜித்சாஹோ படத்தின் முதுகெலும்பு ... சினேகா மீண்டும் கர்ப்பம் சினேகா மீண்டும் கர்ப்பம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

swega - Dindigul,இந்தியா
24 ஆக, 2019 - 10:52 Report Abuse
swega சிம்ஹானா யாரு
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
23 ஆக, 2019 - 01:14 Report Abuse
skv srinivasankrishnaveni வாழ்கவளமுடன் குழந்தை அண்ட் தாயின் ஆரோக்கியம் நல்லபடியா இருக்க பழனி ஆண்டவனை வேண்டுகிறேன் கடவுளின் வீட்டுப்பெரியவா எல்லோருடைய ஆசிகளும் உண்டு உங்களுக்கும் அருமை மகனுக்கும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in