Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ப்ரியங்காவின் நாட்டுப்பற்று: சிக்கல் ஏற்படுத்தும் பாக்.,

22 ஆக, 2019 - 15:25 IST
எழுத்தின் அளவு:
Drop-Priyanka-as-Unicef-envoy:-Pakistan

நடிகர் விஜய் நடித்த படம் தமிழன். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம், தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனவர் நடிகை ப்ரியங்கா சோப்ரா. அதன் பின், அவர் இந்தி சினிமா உலகிற்கு சென்று, நிறைய படங்களில் நடித்து புகழ் பெற்றார். ஒரு கட்டத்தில் அவருக்கு ஆங்கிலப் படத்தில் நடிக்கும் வாய்ப்பும் வந்தது. இதனால், அவர் உலக அளவில் புகழ்பெற்ற நடிகை ஆனார்.

இந்நிலையில், மத்திய அரசு காஷ்மீருக்கு வழங்கி வந்த 370 சிறப்பு பிரிவின் கீழான அந்தஸ்தை ரத்து செய்தது. இதற்கு, பாகிஸ்தான் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால், நடிகை ப்ரியங்கா சோப்ரா, மத்திய அரசின் முடிவை வரவேற்றார். மேலும் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கையும் வரவேற்றார்.

இதற்கு பாகிஸ்தானில் இருக்கும் ப்ரியங்காவின் ரசிகர்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதற்கிடையில், ஐ.நா.,வின் அமைதிக்கான நல்லெண்ண தூதுவராக இருக்கும் ஒரு நடிகை, ஒரு நாட்டின் செயல்பாட்டுக்கு ஆதரவாக செயல்படுவது ஒரு தலைபட்சமானது என பாகிஸ்தானியர்கள் கொந்தளித்தனர்.

இதன் அடுத்த கட்டமாக, ஐ.நா., ப்ரியங்கா சோப்ராவுக்கு வழங்கி இருக்கும் நல்லெண்ண தூதர் என்ற அந்தஸ்தை திரும்பப் பெற வேண்டும் என்று, பாகிஸ்தான் அரசு, ஐ.நா., சபைக்கு கடிதம் எழுதி இருக்கிறது.

முன்னதாக, பாகிஸ்தானை சேர்ந்த ப்ரியங்காவின் ரசிகை ஒருவர், இதே கருத்தை வலியுறுத்தி, ப்ரியங்கா சோப்ராவிடம் கேள்வி எழுப்பி இருந்தார்.

அதற்கு பதில் அளித்த ப்ரியங்கா, “எனக்கு பாகிஸ்தானிலும் நிறைய ரசிகர்கள் உண்டு. நண்பர்களும் நிறைய பேர் உள்ளனர். நான் ஒருபோதும், ஒரு நாட்டுக்கு எதிராக இருக்க மாட்டேன். அதே போல, போரை ஆதரிக்கும் நபரும் நான் அல்ல. அடிப்படையில் நான் ஒரு இந்தியர் என்கிற போது, எனக்கு நாட்டுப் பற்று கட்டாயம் இருக்கத்தானே செய்யும். அந்த அடிப்படையில்தான், இந்தியா எடுக்கும் ஒரு நடவடிக்கை, இந்தியா என்ற நாட்டுக்கு நல்லது என்பதால், நாட்டுப் பற்றோடு, அதை ஆதரித்தேன். மற்றபடி, வேறு யாரையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கும் நோக்கம் எனக்கு இல்லை.

இந்த விஷயத்தால், இந்தியாவுக்கு வெளியேயும் என்னை நேசித்துக் கொண்டிருப்பவர்களின் மனம் துளியளவு வருந்தியிருந்தால் கூட, அதற்காக நானும் வருத்தப்படுகிறேன்; மன்னிப்புக் கோருகிறேன். ஒவ்வொரு மனிதனும் அடுத்தவர் மீது அன்பு செலுத்தவே, உலகத்தில் மனிதனாக பிறந்திருக்கிறோம் என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்'' என கூறியிருந்தார்.

பாகிஸ்தான் ரசிகையின் கருத்தைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அரசு, ஐ.நா.,வுக்கு கடிதம் எழுதியிருப்பது கண்டு, ப்ரியங்கா தரப்பில் அதிர்ச்சி அடைந்திருப்பதாகக் கூறுகின்றனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஸ்ரீதேவி பங்களா படம் மீது போனிகபூர் நடவடிக்கைஸ்ரீதேவி பங்களா படம் மீது போனிகபூர் ... போர்ப்ஸ் பட்டியல்: 4வது இடத்தில் அக்ஷய்குமார் போர்ப்ஸ் பட்டியல்: 4வது இடத்தில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in