Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மதுவுக்கு நடந்தது என்ன?: டேனியல் விளக்கம்

22 ஆக, 2019 - 13:22 IST
எழுத்தின் அளவு:
Daniel-replied-what-happend-for-Madhumita

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை மதுமிதா, தற்கொலை முயற்சி செய்ததால் கடந்தவாரம் அதிரடியாக வெளியேற்றப்பட்டார். இது தொடர்ந்து விவாதத்திற்கு உள்ளாகி உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டதற்கான காரணத்தையும், பிக்பாஸ் வீட்டிற்குள் நடந்த சம்பவங்களை பற்றியும், மதுமிதாவை நேரில் சென்று சந்தித்த முன்னாள் போட்டியாளர் டேனியல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து டேனியல் கூறியிருப்பதாவது: மதுமிதாவிற்கு என்ன ஆனது என பதறிப் போய், அவரை நேரில் சந்திக்க அனுமதி கேட்டு போன் செய்தேன். பிக்பாஸ் நிகழ்ச்சி தயாரிப்பாளரிடம் செய்து கொண்டிருக்கும் ஒப்பந்தப்படி, இப்போதைக்கு எதை பற்றியும் பேச முடியாது. அப்படி பேசினால், என்னுடைய சம்பளம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். சிறிது நாட்களுக்கு பின் பேசுவோம் என்றார். இருப்பினும், அவரை சந்திக்க முடிவெடுத்தேன். அவருக்கே தெரியாமல், அவரது வீட்டிற்கு சென்றேன்.

நான் சென்ற நேரத்தில், அவரது காயத்திற்கு மருத்துவர் ஒருவர் சிகிச்சை அளித்து கொண்டு இருந்தார். கையில், மிகவும் ஆழமான காயங்கள் இருந்தது. எனக்கு தெரிந்த வரை சொல்கிறேன், பிக்பாஸ் வீட்டில் நடந்த டாஸ்கின் போது, மதுமிதா, ஏதோ கருத்து சொல்லி இருக்கிறார். அதை மற்ற போட்டியாளர்கள் யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும், அவர்கள் அனைவரும் சேர்ந்து கொண்டு, மதுவை பயங்கரமாக கலாய்த்துள்ளனர்.

மற்றவர்கள் கிண்டலடித்து, வெறுப்பேற்றியதால் தான், மது, கையை கிழித்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். அந்த நேரத்தில் கஸ்தூரி மட்டும் தான் ஈர துணியை எடுத்து, காயத்தை அமுக்கி உதவி செய்துள்ளார். சேரன், மற்ற போட்டியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டையிட்டுள்ளார். அதனால் தான், மது வெளியேறும் போது, கஸ்தூரி மற்றும் சேரனிடம் மட்டும் தான் பேச விரும்புவதாக கூறியுள்ளார்.

இவ்வாறு டேனியல் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
சை ரா விழா - வராத நயன்தாராவுக்கு எதிர்ப்புசை ரா விழா - வராத நயன்தாராவுக்கு ... சாஹோ படத்தின் முதுகெலும்பு இயக்குநர் சுஜித் சாஹோ படத்தின் முதுகெலும்பு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
22 ஆக, 2019 - 16:28 Report Abuse
Ramesh R oru kundai pottu ellorum seththu pogum padi seyyungal
Rate this:
கக்கூஸ் கவின் இதான் ஊருக்கே தெரிஞ்ச விஷயமாச்சே இதுல என்ன புதுசா இவன் சொல்லுறான்
Rate this:
ram - ,
22 ஆக, 2019 - 14:58 Report Abuse
ram short ah soldrean..no water in swimming pool- cheran pulambify..madhu told andha varuna bagavan kooda karanataka Karan pola if rain vandha dhan pool fill agum....sherin got angry y u insulting karanataka peoples (sherin karanataka person).so fights starts..kavin kindal asingama madhu va Tamil Tamil soldra la prove Panu nu..plus other local words....so to prove madhu did this..
Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
22 ஆக, 2019 - 16:25Report Abuse
Mirthika Sathiamoorthiso what? should we say congratulation to madhu ? what she really wanna to prove? what ever she did to prove that never ever Deli....that is more funny hahaha நாம கிண்டலுக்கு சொல்லுவோம் கிணத்துல விழுக சொன்ன விழுவையான்னு? அதை தயவுசெய்து மதுவிடம் மட்டும் சொல்லாதீங்க அது உடனே விழுந்திடும்.......
Rate this:
ram - ,
22 ஆக, 2019 - 16:44Report Abuse
ramI am not upporting madhu..nadandhadhan I told..avlodhan...Nan yarum support illa...actually media not telling out what exactly happened la...adhan told here.....
Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
23 ஆக, 2019 - 13:33Report Abuse
Mirthika SathiamoorthiAgain one thing i don't understand? why we are expecting the media to tell? why should the media to tell? its media's rights...we can not expect that.. They have their own censor team..After movie censored we can not ask the movie maker to Deli the before censored version right?...Just imagine, After the Delicas if it is gone against sherin then (coz of she is fr karnaadaka )? who will protect her?..its a sensational issue.. vijay TV thinks its necessary they definitely Deli......
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  Tamil New Film Asuran
  • அசுரன்
  • நடிகர் : தனுஷ்
  • நடிகை : மஞ்சு வாரியர்
  • இயக்குனர் :வெற்றிமாறன்
  Tamil New Film Yang Mang Chang
  • எங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in