Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ரூ. 10 கோடி தருவதாக கூறியும் விளம்பரத்தில் நடிக்க மறுத்த ஷில்பா ஷெட்டி

22 ஆக, 2019 - 12:48 IST
எழுத்தின் அளவு:
Shilpa-shetty-denied-to-act-in-Advertistment-even-she-gets-offer-of-Rs.10-crore

மும்பை: விளம்பர படம் ஒன்றில் நடிக்க ரூ. 10 கோடி தருகிறோம் என்று சொல்லியும் கறாராக மறுத்து விட்டாராம் பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி.

பிக்பிரதர்ஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை ஷில்பா ஷெட்டி. தமிழில் மிஸ்டர் ரோமியோ, குஷி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பாலிவுட் படங்களில் நடித்து வந்த இவர், திருமணத்திற்குப் பிறகு நடிப்பிற்கு ஓய்வு கொடுத்தார்.

படங்களில் நடிக்காவிட்டாலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், யோகா நிகழ்ச்சிகள், விளம்பர படங்கள் போன்றவற்றின் மூலம் அவர் தனது ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தி வந்தார். அதோடு அடிக்கடி தனது உடற்பயிற்சி வீடியோக்களை சமூகவலைதளப் பக்கங்களில் பதிவேற்றியும் வருகிறார்

தற்போது 13 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ஷில்பா. இதனால் அவரது ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில், உடல் எடையை குறைக்க உதவும் ஆயுர்வேத மாத்திரை விளம்பரத்தில் நடிக்குமாறு ஷில்பாவிடம் அந்நிறுவனத்தினர் கேட்டுள்ளனர். ஆனால், சற்றும் யோசிக்காமல் முடியாது என்று கூறிவிட்டாராம் ஷில்பா.

இந்த 3 நிமிட விளம்பரத்தில் நடிக்க ரூ. 10 கோடி சம்பளம் தருகிறோம் என்று ஆசை காட்டியுள்ளனர். அப்போதும் எத்தனை கோடி கொடுத்தாலும் அந்த விளம்பரத்தில் நடிக்க மாட்டேன் என்று கறாராக தெரிவித்துவிட்டாராம் ஷில்பா.

“எனக்கு நம்பிக்கை இல்லாத ஒரு விஷயத்தை நான் விற்பனை செய்ய மாட்டேன். உடல் எடையை குறைக்கும் மாத்திரைகள் போன்றவை உடனே பலன் அளிக்கும் என்பதால் கேட்க நன்றாக உள்ளது. ஆனால் சத்தான உணவை சாப்பிட்டு ஆரோக்கியமாக இருப்பதை எந்த மாத்திரையாலும் அடித்துக் கொள்ள முடியாது. நம் வாழ்க்கை முறையில் மாற்றம் செய்தால் பல காலம் நல்லபடியாக வாழலாம்” என தனது ரசிகர்களுக்கு அறிவுரையும் ஷில்பா கூறியுள்ளார்.

ரூ. 10 கோடி ரூபாய் தருகிறோம் என்று கூறியும், தனது ரசிகர்களை தவறான பாதைக்கு வழிகாட்டும் விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் எனக் கூறிய ஷில்பாவை அனைவரும் பாராட்டி வருகின்றனர். அதோடு, உடல் ஆரோக்கியத்திற்கு எது நல்லது என்ற அவரது அறிவுரையும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
குறும்படத்தில் ஜான்விகபூர்குறும்படத்தில் ஜான்விகபூர் அமீர்கான் படத்தில் விஜய் சேதுபதி அமீர்கான் படத்தில் விஜய் சேதுபதி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in