Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காய்ச்சலுக்கு ஐஸ்வர்யாவிடம் ஒரு லட்சம் கறந்த ஆஸ்பத்திரி

21 ஆக, 2019 - 11:49 IST
எழுத்தின் அளவு:
Aishwarya-Rajesh-pay-Rs.1-lakhs-for-ordinary-fever

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், புதுமுக நடிகர் நிக்கி சுந்தரத்துடன் நடித்துள்ள படம் மெய். வருகிற 23ந் தேதி வெளிவருகிறது. இந்த படம் மெடிக்கல் க்ரைம் சம்பந்தப்பட்டது. படத்தின் புரமோசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா, தனக்கு நேர்ந்த ஒரு மெடிக்கல் க்ரைம் பற்றி பேசினார். அவர் கூறியதாவது:

மருத்துவத்துறையில் நடக்கும் முறைகேடுகள் பற்றியது தான் இந்தப் படத்தின் கதை. முதலில் இந்தப் படத்துக்காக என்னை அணுகியபோது, புதுமுகமாக இருக்கிறதே வேண்டாம் என்று தான் நினைத்தேன். தமிழ், தெலுங்கு என மாறி மாறி நடித்து வந்ததால் கால்ஷீட் பிரச்சினை வேறு இருந்தது. ஆனால் கதையை மட்டும் கேளுங்கள் என்று வற்புறுத்தி கதை கேட்க வைத்தார்கள். கதையைக் கேட்ட பின், அதில் வரும் சம்பவங்கள், அனுபவங்கள் எனக்கே நடந்தது. ஆகையால் உடனே ஒப்புக்கொண்டேன்.

ஒரு முறை சாதாரண காய்ச்சலுக்காக சிகிச்சை பெற, ஒரு பெரிய தனியார் மருத்துவமனைக்குச் சென்றேன். உடனடியாக அட்மிட் பண்ணி, ஏகப்பட்ட பரிசோதனைகளைச் செய்தனர். காய்ச்சலுக்காக எம்.ஆர்.ஐ ஸ்கேன் எல்லாம் செய்தனர். இரவில் நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கும் போது எழுப்பி, இசிஜி எடுத்தனர்.

ஒரு சாதாரண காய்ச்சலுக்கு இத்தனை பரிசோதனைகளா? என்று அதிர்ந்துபோனேன். மறுநாள் ஞாயிற்றுக் கிழமை டிஸ்ஜார்ஜ் பண்ண முடியாது என்றார்கள். அட போங்கப்பா நீங்களும் உங்க ட்ரீட்மெண்டு என்று கூறிவிட்டு அந்த மருத்துவமனையிலிருந்து வெளியேறினேன். அந்தப் பரிசோதனைகளுக்காக ஒரு லட்ச ரூபாய் பில் போட்டார்கள். ஆனால், எனக்குக் கொடுத்ததோ, ஒரு சாதாரண காய்ச்சல் மாத்திரை தான்.

இந்த அனுபவம் பலருக்கு அவர்களது வாழ்வில் ஏற்பட்டிருக்கும். இதைத்தான் இந்தப் படத்தின் கதை பேசுகிறது. புதுமுகங்கள்தான் என்ன எடுத்து விடப்போகிறார்கள் என்றுதான் நினைத்தேன். ஆனால் நான் எதிர்பார்க்காத அளவிற்கு படத்தை பிரமாண்டமாக எடுத்திருக்கிறார்கள். தமிழ் சரியாக தெரியாவிட்டாலும் சிரமப்பட்டு நடித்தார் நிக்கி சுந்தரம். என்றார்.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
கோமாளி - 6 நாளில் 25 கோடி வசூல்கோமாளி - 6 நாளில் 25 கோடி வசூல் விஜய் சேதுபதியுடன் லாவண்யா நெகிழ்ச்சி சந்திப்பு விஜய் சேதுபதியுடன் லாவண்யா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

muthu Rajendran - chennai,இந்தியா
25 ஆக, 2019 - 15:55 Report Abuse
muthu Rajendran இது போன்ற செய்திகள் அதிகம் வருகின்றன. பொதுவாக ஒரு மருத்துவமனைக்கு சென்றால் அது பெரிதோ சிறிதோ என்பதல்ல இன்சூரன்ஸ் இருக்கிறதா என்று கேட்டு இருந்தால் என்ன நோயாக இருந்தாலும் ஐ சி யு வில் அட்மிஷன்.பிறகு காய்ச்சல் குறைந்ததும் முழு பரிசோதனை அணைத்து வகையான ரத்த சோதனை , ஸ்கேன் உள்பட எடுத்து பிறகு இரெண்டாம் நாள் சாதாரண வார்டுக்கு மாற்றம் அடுத்து டிஸ்சார்ஜ் ஒரு நோயாளி வந்தால் அவருக்கு ஏன் எதனால் காய்ச்சல் வந்தது என்பதை சோதனை செய்வது அவசியம் என்று சொல்லலாம் .முன்பெல்லாம் மிகச் சிறந்த மருத்துவர்கள் தேவையான குறிப்பிட்ட சோதனை மட்டுமே செய்ய சொல்வார்கள். இப்போதெல்லாம் எல்லா சோதனைகளையும் வழக்கமாக செய்ய சொல்கிறார்கள் இதில் இன்சூரன்ஸ் கம்பெனி பெரும்தொகையை கொடுத்து விடுகிறது. எனவே நோயாளிக்கு சிரமமில்லை. மருத்துவமனைக்கு அபரிதமாக வருவாய். இதில் இன்சூரன்ஸ் இல்லாத நோயாளிக்கும் இப்படி செய்யும்போது அவர்கள் எங்கே போவார்கள்.நோயாளி இறுதியில் கடனாளி ஆகிறார். இது இருக்கட்டும் தனியார் மருத்துவமனைகளின் வசதிகள், மருத்துவர்கள் தகுதி , அங்கு அளிக்க படும் சிகிச்சைகள் வசூலிக்கப்படும் கட்டணம் இவைகளையெல்லாம் வரையறை செய்து அவவ்ப்போது கண்காணிக்க ஏதேனும் ஒரு அமைப்பை அரசாங்கம் என் நிறுவக்கூடாது.? ஒரு தேநீர் கடை வைக்க மூன்று லைசென்ஸ் வேண்டுமாம் ஒரு மருத்துவமனை வைக்க எதாவது நடைமுறைகள் உள்ளனவா ?என்பது தெரிய வில்லை.
Rate this:
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
23 ஆக, 2019 - 06:26 Report Abuse
Natarajan Ramanathan சாதாரண காய்ச்சலுக்காக சிகிச்சை பெற, ஒரு பெரிய தனியார் மருத்துவமனைக்குச் செல்லவேண்டிய அவசியம் என்ன? பணக் கொழுப்புதானே? முப்பது வயதுவரை மிகவும் கஷ்டப்பட்டு படித்து மருத்துவம் பார்க்க தொடங்கும் டாக்டரை கேவலம் உடலைகாட்டிப் பிழைக்கும் கூத்தாடிகள் எல்லாம் விமர்சனம் செய்வது அநியாயம். இவர் என்ன தகுதி இருக்கு என்று கோடிகளில் சம்பளம் வாங்குகிறார்??
Rate this:
sri - trichy,இந்தியா
22 ஆக, 2019 - 10:56 Report Abuse
sri எனக்கு ஒருநாள் நல்ல பேதி. நான் norfloux tz எடுத்துண்டு ஒரு ஹாஸ்பிடல் போனேன். டாக்டர் சரி அதே மெடிசின் continue பண்ணுங்கோ ஆனால் உடனே அட்மிட் ஆகுங்கள் என்றார். நானும் பேதிக்கு எதுக்கு அட்மிட் ஆகணும் அப்பிடி என்று கேட்டேன். அதற்கு என்னக்கு தெரியாது ஒங்க கிட்னி fail ஆகலாம் அதனால மரணம் சம்பவிக்கலாம். admit அகலின பேப்பர் ல sign பண்ணிட்டு போங்கள் என்றார். நானும் மூன்று paper la என்னோட ரிஸ்க் ல போறான் னு சிங் பண்ணிட்டு வந்தேன்
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
22 ஆக, 2019 - 07:18 Report Abuse
skv srinivasankrishnaveni ப்ளீஸ் ஏவாளும் தனியார் ஆஸ்பத்திரிக்கே போவாதீங்க சிரோசின் பாராசிட்டமால் என்ற மாத்திரைகளே வாயில் நுழையாத பெயரில் மாத்திரையாக தருதுங்க எனக்கு நன்னாப்ல அனுபவங்கள் உண்டு குடலிறக்கத்துக்கு எனக்கு ஆன சிலவு ஒருலக்ஷம் நம்புவீங்களா சாமானியன் தான் நானெல்லாம். நோ டாக்டர்ஸ் அண்ட் ஆசுபத்திரி என்று முடிவு செத்துட்டேன் மீறினால் என்ன மரணம் தான் என்று தெரியும் போனால் புண்ணியம் செய்தொம் , தப்பித்தவரியும் நோ ஆச்பிடல் தனியார் ஆசுபத்திரிக்கு கோடி கும்புடு
Rate this:
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
22 ஆக, 2019 - 07:10 Report Abuse
 nicolethomson இது போன்ற நிகழ்வு சமீபத்தில் கோவையில் எனது நண்பனின் தாய்க்கு நடந்தது நான்கு லட்சம் பில் போட்டுள்ளனர் , அவன் பெங்களூரில் எங்களை தொடர்பு கொண்டு கடன் கேட்டு பின்னர் அடைத்தான் , பாவம் நம் மக்கள்
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in