Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

குண்டு வாத்து: வனிதாவுக்கு புது பட்டபெயர் வைத்த கஸ்தூரி

21 ஆக, 2019 - 10:57 IST
எழுத்தின் அளவு:
Duck-Vanitha-says-Kasthuri

சென்னை: பிக்பாஸ் வீட்டில் கஸ்தூரி, வனிதா என இரண்டு சண்டைக்கோழிகளுக்கு இடையே பிரச்சினை மூண்டுள்ளது.

கடந்த வாரம் வைல்ட் கார்டு மூலம் உள்ளே வந்தார் கஸ்தூரி. அவரைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினராக உள்ளே வந்து, தற்போது அவரும் ஒரு போட்டியாளராகி விட்டார் வனிதா. இவர்கள் இருவருக்கும் இடையே ஆரம்பத்தில் இருந்தே ஒரு பனிப்போர் நடந்து வருகிறது.

கமலும் கூட இது பற்றி கடந்த வாரம் கேள்வி எழுப்பினார். ஆனால், இருவரும் சரியாக பதில் சொல்லாமல் மழுப்பி விட்டனர். புறணி பேசுவது, தனித்தனியே சண்டை மூட்டுவது என தங்களால் இயன்ற அளவு பிக் பாஸ் வீட்டில் இருவருமே பிரச்சினைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த வாரம் கஸ்தூரிக்கும், வனிதாவிற்குமே நேரடியாக மோதல் ஏற்பட்டுள்ளது. பள்ளிக்கூடம் டாஸ்க்கில் முதலில் வனிதாவை வாத்து எனக் கூப்பிட்டார் கஸ்தூரி. அப்போதே வனிதாவிற்கு கோபம் வந்தது. ஆனால், அதனை அவர் வேறுவிதமாக வெளிக்காட்டினார்.

அப்போதே இந்த வாரம் இவர்கள் இருவருக்கும் இடையில் தான் சண்டை நடக்கப் போகிறது என்பது தெளிவாகி விட்டது. இந்தச் சூழ்நிலையில், 'என்னை குண்டுனு சொல்றீங்களா?' எனக் கேட்டு மீண்டும் சண்டை போடத் தொடங்கியுள்ளார் வனிதா. இவர்களது பிரச்சினையில் சேரன் இடையில் சிக்கிக் கொண்டு தலையை சொரிந்து கொண்டு நிற்கிறார்.

கஸ்தூரி மற்றும் சேரனின் பெயர் இந்த வார நாமினேசனில் உள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
முதல்முறையாக நாமினேசனுக்கு வந்த சாண்டிமுதல்முறையாக நாமினேசனுக்கு வந்த ... பிக்பாஸ் நிகழ்ச்சியால் கமலுக்கு புதுச்சிக்கல் பிக்பாஸ் நிகழ்ச்சியால் கமலுக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

meenakshisundaram - bangalore,இந்தியா
22 ஆக, 2019 - 02:58 Report Abuse
meenakshisundaram குண்டு வாத்து -நல்ல பெயரா இருக்கே ஆனா வேறே பெயர் இல்லையா?
Rate this:
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
22 ஆக, 2019 - 00:21 Report Abuse
Allah Daniel என்னதான் இருந்தாலும் கஸ்துரி இப்படி சொல்லி இருக்கக்கூடாது..வாத்து இனத்துக்கே பெரும் அவமானம்..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in