அட்லீ - பிரியாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | கடைசி கட்ட ஓட்டத்தில் 'வாரிசு, துணிவு' | விஜய் 67ல் இணைந்த சஞ்சய் தத் - அடுத்தடுத்து வந்த அப்டேட்கள் | ஒழுங்கா வேலைய பாரு : ரசிகருக்கு ரஜினி அறிவுரை | திருப்பதி அருகே இந்தியன் 2 படப்பிடிப்பு : ஹெலிகாப்டரில் சென்று இறங்கிய கமல் | குஷ்புவிடம் மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா நிறுவனம் | அமானுஷ்யத்தின் பக்கங்களை புரட்டும் ‛கருங்காப்பியம்' : டிரைலர் வெளியீடு | திருமணநாளில் விஜயகாந்த்தை நேரில் சந்தித்து வாழ்த்திய எஸ்.ஏ.சந்திரசேகர் | வட இந்தியர்கள், தென்னிந்திய படங்களை விரும்பி பார்க்கிறார்கள்: சந்தீப் கிஷன் | 'விஜய் 67' காஷ்மீர் சென்ற த்ரிஷா, பிரியா ஆனந்த் |
சென்னை: முதன்முறையாக சாண்டி இந்த வாரம் நாமினேசன் லிஸ்டில் இடம் பிடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து 50 நாட்களுக்கு மேலாகி விட்டது. இதுவரை நாமினேசனுக்கு வராத போட்டியாளர் யார் என்றால் அது டான்ஸ் மாஸ்டர் சாண்டி தான். பிக்பாஸ் நிகழ்ச்சி கலகலப்பாக செல்ல சாண்டியும் முக்கியக் காரணம்.
பல சீரியசான நேரங்களில் கூட அவரது காமெடியால் அந்த இடத்தையே கலகலப்பாகி விடுவார் சாண்டி. எனவே அவருக்கு ரசிகர்கள் ஏராளம். பிக்பாஸ் வீட்டிலுமே இதுவரை சக போட்டியாளர்களின் எதிர்ப்பை சம்பாதிக்காமல் இருந்தார். அதனால் தான் வாராவாரம் நாமினேசனில் இருந்து தப்பி வந்தார்.
சமயங்களில் சாண்டியின் கிண்டல் பேச்சு போட்டியாளர்களுக்கு கோபத்தை ஏற்படுத்திய சம்பவங்களும் உண்டு. ஆனால் அடுத்த நிமிடமே சம்பந்தப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்டு சமாதானப் படுத்தி விடுவார் சாண்டி.
ஆனால், கடந்த வாரம் ஐவர் அணி உருவானதில் இருந்து, எதிரணியினரின் கோபத்திற்கு ஆளானார் அவர். சாண்டியின் சொல் கேட்டு தான் மற்றவர்கள் நடப்பதாக, வனிதா, கஸ்தூரி மற்றும் சேரன் ஆகியோர் கருதுகின்றனர். இதன் எதிரொலியாக இந்த வாரம் சாண்டியின் பெயரும் நாமினேசன் லிஸ்ட்டில் இடம் பிடித்து விட்டது.