இந்தியத் திரையுலகின் மூத்த இயக்குனர் கே.விஸ்வநாத் காலமானார் | விஜய் மில்டன் படத்தில் ஷாம் | ‛விஜய் 67' பட தலைப்பு லோடிங் : நாளை வருகிறது அறிவிப்பு | இசை படைப்புகளுக்கு சேவை வரியை எதிர்த்த ஏ.ஆர்.ரஹ்மான், ஜிவி பிரகாஷின் மனுக்கள் தள்ளுபடி | 90 சதவீதம் குணமடைந்துவிட்டேன் : விஜய் ஆண்டனி | விஜய் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் நடிகரின் மகள் | விஜய் படத்திற்காக இளம் நடிகரை சிபாரிசு செய்தாரா மாளவிகா மோகனன் ? | நயன்தாராவின் அடுத்த இரண்டு புதிய படங்கள் | ‛பையா 2' உருவாகிறது : ஆர்யாவுக்கு ஜோடியாகும் ஜான்வி கபூர்? | சூர்யா 42வது படத்தில் சீதா ராமம் நாயகி நடிக்கிறாரா? |
கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் மற்றும் பலர் நடித்துள்ள படம் 'எனை நோக்கி பாயும் தோட்டா'. படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டிற்குத் தயாராக இருந்த படம் பல்வேறு பைனான்ஸ் பிரச்சினைகளால் தாமதமானது.
படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனத்தினர் தீவிர முயற்சியில் இறங்கினர். படத்தின் பைனான்ஸ் சிக்கலை தன்னுடைய இரண்டு படங்களான 'எனை நோக்கி பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம்' ஆகியவற்றின் மூலம் தீர்ப்பதாக கவுதம் மேனன் உறுதி அளித்தாராம்.
இந்த பஞ்சாயத்தில் தயாரிப்பாளர் சங்க ஆலோசனைக் குழுவினர், பைனான்சியர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டதாகத் தெரிகிறது. பிரச்சினை முடிவடைந்ததால் படத்தை செப்டம்பர் மாதம் முதல் வாரம் வெளியிட முடிவு செய்துள்ளார்களாம். எந்தத் தேதியின் என்பதை விரைவில் அறிவிக்க உள்ளார்கள்.
இந்தப் படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு தனுஷ் நடித்துள்ள 'அசுரன்' படம் அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது.