'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத் | பாலகிருஷ்ணா பட இயக்குனரைப் பாராட்டிய ரஜினிகாந்த் | அதிவேக சாதனையில் 'பதான்' | சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் | பிரபாஸ் படத்தில் இணைந்த மாளவிகா மோகனன் | விஜய் 67வது படத்திற்காக கெட்டப்பை மாற்றிய அர்ஜுன் | 15 ஆண்டு பகை - விஜய்யுடன் பேசுவதற்கு தயாராக இருக்கும் நெப்போலியன்! | சூர்யாவின் வாடிவாசல் படத்தில் இணைந்த அவதார் கிராபிக்ஸ் குழு! | சிம்புவிற்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன்! |
சாதனை முயற்சியாக பார்த்திபனால் உருவாக்கப்பட்டிருக்கும் ‛ஒத்த செருப்பு படத்துக்கு பாராட்டு குவிந்து வருகிறது. ரஜினிகாந்த், கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் மட்டுமின்றி ஆமீர்கான், சிரஞ்சீவி, மம்முட்டி, மோகன்லால் மற்றும் யாஷ் ஆகியோரும் பார்த்திபனின் சாதனையை பாராட்டி உள்ளனர்.
ரஜினிகாந்த் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் "பார்த்திபனின் அபாரமான இந்த முயற்சி, உலக அளவில் அங்கீகாரம் பெற வேண்டும். எனவே சப்-டைட்டிலுடன் படத்தை ஆஸ்கர் விருது தேர்வுக்கு அனுப்ப வேண்டும்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
கமல்ஹாசன் தன் வாழ்துச் செய்தியில், "ஏற்கெனவே ஒற்றைப் பாத்திரமாக படம் முழுவதும் வந்த ராபர்ட் ரெட்போர்ட், டாம் ஹார்டி ஆகிய ஹாலிவுட் நட்சத்திரங்களின் வரிசையில் பார்த்திபனும் இணைந்து விட்டது நிதர்சனமாகத் தெரிகிறது" என்று கூறியிருக்கிறார்.
சிரஞ்சீவி, "நண்பர் பார்த்திபனின் தனித்துவம் மிக்க திரைப்பட சோதனை முயற்சி இது" என்று தெரிவித்திருக்கிறார்.
இந்தி நடிகர் ஆமிர்கான், "வழக்கத்துக்கு மாறான மிகப் புதிய முயற்சி இது. இதைப்பற்றி பேசுவதற்கே பரவசமாக இருக்கிறது" என்று சொல்கிறார்.
கன்னட நடிகர் யாஷ், "யாருமே பயணப்படாத புதிய பாதையில் பயணப்படுவது பார்த்திபனுக்கு கைவந்த கலை. எங்களைப் போன்ற நடிகர்கள் செய்ய பயப்படுவதை அவர் எளிதாகச் செய்திருக்கிறார் "என்று கூறியிருக்கிறார்.
பயாஸ்கோப் பிலிம் பிரேம்ஸ் சார்பில் பார்த்திபன் தயாரித்து, இயக்கியிருக்கும் இப்படம் இம்மாதம் 30ஆம் தேதி திரைக்கு வருகிறது. மேலும் சிங்கப்பூரில் நடக்கும் தெற்கு ஆசிய சர்வதேச திரைப்பட விழாவிலும் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.