சினிமாவில் ஒவ்வொரு நாளும் போராட்டமே - ஐஸ்வர்ய லட்சுமி | ரூ.400 கோடி வட்டிக்கு வாங்கி எடுக்கப்பட்ட பாகுபலி : ராணா தகவல் | அடுத்த மாதம் ஜென்டில்மேன் 2 பட இசையை துவங்கும் கீரவாணி | ஆல்கஹால் தேவையில்லை.. டானிக்கே போதும் ; அதா ஷர்மாவின் அதிரடி | ஆந்திர முதல்வர் சுயசரிதையை படமாக்கும் ராம்கோபால் வர்மா | மகேஷ்பாபு படத்தில் மோகன்லாலை இணைக்க முயற்சி செய்யும் ராஜமவுலி | மலையாள பட விழாவில் விஜய் தேவரகொண்டா பட இயக்குனரை விமர்சித்த அல்லு அரவிந்த் | இந்திய வரலாற்றின் மாபெரும் துயரங்களில் ஒன்றாக ஒடிசா ரயில் விபத்து மாறியிருக்கிறது - திரைப்பிரபலங்கள் இரங்கல் | வெற்றிகரமான 'வாரம்' இல்லை, வெற்றிகரமான 'நாட்கள்' மட்டுமே.. | ஆதிபுருஷ் படத்தின் புதிய டிரைலர் அப்டேட் |
இயக்குனர் பாலசந்தரிடம் உதவி இயக்குனராக பல தொலைக்காட்சி தொடர்களில் பணியாற்றியவர் சமுத்திரக்கனி. கடந்த 2003ல் வெளிவந்த உன்னை சரணடைந்தேன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து தொலைக்காட்சி தொடர் மற்றும் சில படங்களையும் இயக்கினார்.
மேலும், சில படங்களில் குணச்சித்திர நடிகராகவும், சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இந்நிலையில், ராதிகா சரத்குமார் நடிக்கவுள்ள புதிய தொலைக்காட்சி தொடர் ஒன்றை சமுத்திரக்கனி இயக்கவுள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: தொலைக்காட்சி தொடர்கள் மூலமும் சமூகத்துக்கான நல்ல விஷயங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல முடியும். சினிமா எப்படி மக்களை மகிழ்விக்கும் ஒரு அம்சமாக விளங்குகிறதோ, அப்படித்தான் தொலைக்காட்சித் தொடர்களும் இருக்கின்றன. துவக்கம் அங்கிருந்துதான் என்பதால், அதை எந்த காலத்திலும் புறக்கணிக்க முடியாது. தெரிந்த விஷயம் எப்போது வேண்டுமானாலும், எங்கிருந்து வேண்டுமானாலும் வந்து செய்யலாம். தொலைக்காட்சித் தொடர்களில் மீண்டும் கவனம் செலுத்துவதால், சினிமாவை விட்டுவிடுவேன் என்பது அர்த்தமல்ல. சினிமா வாழ்க்கையும் அதே வேகத்தோடு தொடரும்.
இவ்வாறு சமுத்திரக் கனி கூறினார்.