Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வரவேற்பை பெற்ற துருவ் விக்ரமின் முதல் பட பாடல்

19 ஆக, 2019 - 14:03 IST
எழுத்தின் அளவு:
Dhruv-vikrams-Edharkadi-song-got-good-response

தெலுங்கில் எடுக்கப்பட்டு வெளியான படம் அர்ஜூன் ரெட்டி. இந்தப் படம் தெலுங்கில் பெரும் வெற்றியைப் பெற்றதோடு, வசூலிலும் சாதனை படைத்தது. இந்தப் படத்தை தமிழில், வர்மா என்ற பெயரில் ரீமேக் செய்தனர். இந்தப் படத்தில், நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடித்திருந்தார். படத்தை இயக்குநர் பாலா இயக்கி இருந்தார்.

படமெல்லாம் முடிந்து ரிலீசுக்கான பணிகள் நடந்து கொண்டிருந்த போது, படத்தை முழுமையாக போட்டு பார்த்த படக் குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். படம் எதிர்பார்த்தபடி வரவில்லை எனக் கூறி, படத்தை மீண்டும் எடுத்துக் கொடுக்க, பாலாவை வற்புறுத்தினர். ஆனால், அதற்கு அவர் ஒப்புக் கொள்ளவில்லை.

இருந்தாலும், படத்தை மீண்டும் எடுக்க வேண்டும் என தயாரிப்பாளர் தரப்பினர் முடிவெடுத்தனர். பாலாவை கழற்றி விட்டு விட்டு, கிரிஷய்யா என்ற புதுமுக இயக்குநரை வைத்து, வர்மா படத்தின் பெயரை ஆதித்ய வர்மா என பெயர் மாற்றம் செய்து படத்தை எடுத்தனர். படத்தில் கதாநாயகனாக துருவ் விக்ரமையே நடிக்க வைத்தனர்.

இப்படம் நடிகர் விக்ரமின் மகன் துருவ் நடிக்கும் முதல் படம் என்பதால், பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இப்படத்தில் இடம் பெறும் எதற்கடி வலி தந்தாய் என்ற பாடல் வெளியாகி, ரசிகர்களை கவர்ந்துள்ளது. தற்போது வரை 8 லட்சத்திற்கு அதிகமானோர் அந்தப்பாடலை பார்த்துள்ளனர். தொடர்ந்து இப்பாடல் டிரெண்ட்டிங்கில் 8வது இடத்தில் உள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மலையாளத்தில் ஒரு ரவுண்டு வருவேன்: நடிகை ஓவியாமலையாளத்தில் ஒரு ரவுண்டு வருவேன்: ... பிகினியில் கிறங்கடிக்கும் ரகுல் ப்ரீத் சிங் பிகினியில் கிறங்கடிக்கும் ரகுல் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in