Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கென்னடி கிளப்பில் அறிமுகமாகும் இரட்டையர்கள்

19 ஆக, 2019 - 12:34 IST
எழுத்தின் அளவு:
Twin-sisters-acting-in-Kennedy-Club

பாரதிராஜா, சசிகுமார், லட்சுமி கோவிந்தராஜ் நடிக்கும் படம் கென்னடி கிளப். பெண்கள் கபடி போட்டியை மையமாக கொண்டு தயாராகும் இந்தப் படத்தை சுசீந்திரன் இயக்கி, தயாரித்துள்ளார். வருகிற 23ந் தேதி வெளிவருகிறது.

இதில் சுசீந்திரனின் தந்தை நடத்தி வரும் கென்னடி கிளப் என்கிற ஒரிஜினல் கபடி டீமில் விளையாடும் கபடி வீராங்கணைகள் நடித்துள்ளனர். அவர்களுடன் கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்த வித்யா, விருந்தா என்ற இரட்டை சகோதரிகள் நடித்திருக்கிறார்கள். இவர்கள் சிறுவயதிலிருந்தே கபடி விளையாடி வருகிறார்கள். தேசிய போட்டிகளில் இதுவரை 15க்கும் மேற்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கங்களை பெற்றிருக்கிறார்கள்.

கென்னடி கிளப்பில் நடித்தது குறித்து வித்யா, விருந்தா கூறும்போது: விளையாட்டு தான் எங்கள் உலகம். சினிமாவில் நடிப்போம் என்று கனவிலும் நினைக்கவில்லை. அந்த வாய்ப்பை சுசீந்திரன் எங்களுக்கு கொடுத்தார். எங்களை திரையில் பார்க்கும்போது எங்களுக்கே ஆச்சர்யமாக இருக்கிறது. தொடர்ந்து கபடி விளையாட்டில் கவனம் செலுத்துவோம். இரட்டை சகோதரிகளாக நடிக்க நல்ல வாய்ப்பு வந்தால் நடிக்கவும் செய்வோம். என்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
சர்வதேச சைக்கிள் போட்டியில் பங்கேற்கிறார் ஆர்யாசர்வதேச சைக்கிள் போட்டியில் ... பொன்விழா படங்கள்: ஸ்ரீதேவி முருகனாக நடித்த ‛துணைவன்' படம் பொன்விழா படங்கள்: ஸ்ரீதேவி முருகனாக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

jay - toronto,கனடா
24 ஆக, 2019 - 17:39 Report Abuse
jay சினிமால் மோசமானவர்கள் இருக்காங்க ,,, உழைப்பை நம்பு ,,, சினிமாவில் திறமைக்கு மதிப்பில்லா ,,,
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in