Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் டிவியில் சமுத்திரக்கனி, ராதிகா கூட்டணி

19 ஆக, 2019 - 10:23 IST
எழுத்தின் அளவு:
Samuthirakani---Radhika-backs-to-Serial-in-television

இயக்குனர் பாலசந்தரிடம் உதவி இயக்குனராக பல டிவி சீரியல்களில் பணியாற்றியவர் சமுத்திரக்கனி. 2003ல் 'உன்னை சரணடைந்தேன்' என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அடுத்து 'நெறஞ்ச மனசு' படத்தை இயக்கினார். அந்தப் படம் தோல்வியடைந்ததால் மீண்டும் டிவி பக்கம் போனார்.

2007ம் ஆண்டு ஒளிபரப்பான ராதிகா நடித்த 'அரசி' தொடர் மூலம் சின்னத் திரையில் இயக்குனராக அறிமுகமானார். அதன் பின் 'தங்கவேட்டை' என்ற ஷோவையும் இயக்கினார். பின்னர், 'அண்ணி' மெகா தொடரையும் இயக்கினார்.

மீண்டும் 2009ல் வெளிவந்த 'நாடோடிகள்' படம் மூலம் இயக்குனராக வந்து வெற்றி பெற்றார். தொடர்ந்து சில படங்களை இயக்கியதோடு, சிறந்த குணச்சித்திர நடிகராகவும் மாறினார். சில படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்துள்ளார்.

இப்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் டிவி தொடர் இயக்க ஆரம்பித்துள்ளார். ராதிகா நடிக்கும் தொடரை சமுத்திரக்கனி இயக்குகிறார். இது பற்றிய முதல் கட்ட அறிவிப்பை ராதிகா வெளியிட்டுள்ளார்.

சினிமாவில் வெற்றிகரமான நடிகராக இருக்கும் சமுத்திரக்கனி மீண்டும் டிவி பக்கம் சென்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
ஹாட்ரிக் வெற்றி கொடுத்த ஜெயம் ரவிஹாட்ரிக் வெற்றி கொடுத்த ஜெயம் ரவி பிரபாஸுக்கு 60 அடி கட்-அவுட் வைத்த ரசிகர்கள் பிரபாஸுக்கு 60 அடி கட்-அவுட் வைத்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
19 ஆக, 2019 - 12:27 Report Abuse
Natarajan Ramanathan சமூத்திரகனிக்கு ராதிகாவின் வயதில் சரிபாதியாவது இருக்குமா?
Rate this:
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
19 ஆக, 2019 - 12:14 Report Abuse
Natarajan Ramanathan சமூத்திரகனிக்கு ராதிகாவின் வயதில் பாதியாவது இருக்குமா?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in