175ஐத் தொட்டது 2023ல் வெளியான தமிழ்ப் படங்கள் | விடாமுயற்சி - அஜர்பைஜான் புறப்படும் அஜித் | தனது நிறுவனத்திற்கு ஓகே, சினிமாக்கு நோ : நயன்தாரா பாலிசி | 'முனி 4' போல அடுத்து 'அரண்மனை 4' | ‛அப்பா' படம் வரி விலக்கிற்கு லஞ்சம் கொடுத்தேன் - சமுத்திரகனி | துருவ நட்சத்திரம் படத்திற்கு 11 இடங்களில் கட் | ராஜா ராணி டூ ஜவான் : ப்ரியா அட்லியின் நெகிழ்ச்சி பதிவு | டைகர் ஷெராப் படத்தின் தமிழ் டீசரை வெளியிட்ட த்ரிஷா | புடவை கட்டினாலும் சாந்தினி ஹாட் தான் | வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் சமீரா ஷெரீப் : கம்பேக் எப்போது? |
நடிகர் விஜய் சேதுபதி-நடிகர் மாதவன் ஆகியோர் இணைந்து நடித்திருந்த படம் 'விக்ரம் வேதா'. கடந்த 2017ல் படம் ரிலீஸ் ஆனது. இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் தம்பியாக நடிகர் கதிர் நடித்திருந்தார். அதற்காக பாராட்டையும் பலரிடம் இருந்து பெற்றார். பின், 'பரியேறும் பெருமாள்' படத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்திலும் அவர் சிறப்பாக நடிக்க, அவருக்கான பட வாய்ப்புகள் தொடர்கின்றன.
அந்த வகையில், அவருக்கு புதிய பட வாய்ப்பாக இயக்குநர் குமரன் இயக்க, 'ஜடா' படம் வேகமாக தயாராகி வருகிறது. பொயட் ஸ்டூடியோ தயரிக்கும் இந்தப் படத்தில், நடிகர் கதிர் கால்பந்தாட்ட வீரராக நடித்திருக்கிறார். இந்தப் படத்தில், யோகிபாபு, ஆடுகளம் கிஷோர், லிஜீஸ் உள்ளிட்டோரும்ந் நடித்திருக்கின்றர்.
இதற்கிடையில், இந்தப் படத்தின் டீசரை விரைவில் வெளியிட இருக்கின்றனர். 'விக்ரம் வேதா' படத்தில் நடித்த விஜய் சேதுபதி, வரலட்சுமி, மாதவன், இயக்குநர்கள் புஷ்கர் காயத்ரி, தயாரிப்பாளர் சசி ஆகியோர் இணைந்து டீசரை வெளியிடுகின்றனர். இந்த டீசர் வெளியானது, தொடர்ச்சியாக படம் குறித்த தகவல்களை வெளியிட படக் குழு தீர்மானித்திருக்கிறது.