Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

முதல் படத்திலேயே விருது வாங்கிய ஜெயம் ரவி மகன்

17 ஆக, 2019 - 17:29 IST
எழுத்தின் அளவு:
Jayam-ravi-son-got-award-from-first-film

கத்தார்: சைமா விருது வழங்கும் விழாவில் டிக்டிக்டிக் படத்தில் நடித்த ஜெயம் ரவியின் மகன் ஆரவ், சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதைப் பெற்றார்.

சைமா எனப்படும் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கும் நிகழ்ச்சி கத்தாரில் நடைபெற்றது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் கடந்த ஆண்டு வெளியான படங்களில் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குனர், சிறந்த படம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த விழாவில், நான்கு மொழி சினிமாக்களில் இருந்தும் ஏராளமான நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். இரண்டு நாட்களாக நடத்தப்பட்ட விழாவில் முதல் நாளான 15ம் தேதி தெலுங்கு மற்றும் கன்னடப் படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. 2ம் நாளான நேற்று தமிழ் மற்றும் மலையாள படங்களுக்கு விருது வழங்கப்பட்டன.

பல்வேறு பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்ட இந்த விருதுகளில், வடசென்னை படத்தில் நடித்த தனுஷ் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார். சிறந்த நடிகைக்கான விருது 96 படத்திற்காக திரிஷா பெற்றார். விமர்சன ரீதியாக சிறந்த நடிகருக்கான விருது அடங்கமறு படத்தில் நடித்த ஜெயம் ரவிக்கு வழங்கப்பட்டது.

அதேபோல், டிக்டிக்டிக் படத்தில் நடித்ததற்காக ஜெயம் ரவியின் மகன் ஆரவ், சிறந்த குழந்தை நட்சத்திரமாக தேர்வு செய்யப்பட்டார். ஒரே மேடையில் அடுத்தடுத்து அப்பாவும், மகனும் விருது வாங்கிச் சென்றது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
ஆட்டத்தை ஆரம்பித்த கஸ்தூரிஆட்டத்தை ஆரம்பித்த கஸ்தூரி அஜித் படம் தயாராகும் வெங்கட் பிரபு ? அஜித் படம் தயாராகும் வெங்கட் பிரபு ?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

19 ஆக, 2019 - 10:38 Report Abuse
ஸாயிப்ரியா தந்தையை மிஞ்சும் தனயனாக மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
18 ஆக, 2019 - 04:51 Report Abuse
J.V. Iyer ஜெயம் ரவி நல்ல நடிகர். நான் அவர் ரசிகன். ஆனால் கோமாளி படம் சொதப்பிவிட்டது. நான் பார்த்ததிலேயே ஜெயம் ரவியின் மிகவும் மோசமான படம் கோமாளி. வருத்தம்..வருத்தம்..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in