Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகர் சங்கத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கத் தடை: கேட்கப்படும் கேள்விகள்

17 ஆக, 2019 - 13:39 IST
எழுத்தின் அளவு:
Some-questions-regarding-nadigar-sangam-election-result

நடிகர் சங்கத்துக்கு முறைப்படி தேர்தல் நடந்தும், அது தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதால், தேர்தல் முடிவுகளை அறிவிப்பதற்கு, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துக் கொண்டே வருகிறது. இதனால், தேர்தல் முடிந்தும், தேர்ந்தெடுகப்படும் நிர்வாகிகள் யாரென்று தெரியாமலேயே இருந்து வருகிறது.

இந்நிலையில், இப்போது நடக்கும் மொத்த பிரச்னைகளுக்கும் நடிகர்கள் எஸ்.வி.சேகர், ராதாரவி, ஐசரி கணேஷ் ஆகியோர் தான் காரணம் என, சங்கத்தின் மூத்த உறுப்பினரான அனந்த கிருஷ்ணன், நடிகர் சங்கத்தில் நடப்பது குறித்து நோட்டீஸ் அச்சடித்து, சினிமா பிரபலங்கள் அனைவருக்கும் கொடுத்து வருகிறார்.

அதில், அவர் சில கேள்விகளை முன் வைத்திருக்கிறார்.

* நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கும் பெஞ்சமினும், ஏழுமலையும் யாருடைய கையாட்களாக இதைச் செய்கின்றனர்.

* அவர்கள் இருவரும் நாடக் கலைஞர்களா... இல்லை சினிமா கலைஞர்களா?

* இவர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர். அந்த வழக்கில் வாதாட ஐந்து அல்லது ஆறு லட்ச ரூபாயை தினந்தோறும் கொடுத்து வருகின்றனர். இந்தப் பணமெல்லாம் வழக்குப் போட்டவர்களுடையதா? அல்லது யார் பினாமியாக இருந்து, அவர்கள் வழக்குத் தொடுத்துள்ளனர்?

* நடிகர்களும், நடிகர் சங்க நிர்வாகிகளுமான விஷால், நாசர், கார்த்தி மீது ஏகப்பட்ட மோசடிப் புகார்களைக் கூறினர். எதுவுமே எடுபடவில்லை. நடிகர் சங்கத் தேர்தல் நியாயமாகவும்; அமைதியாகவும் நடந்து முடிந்து விட்டது. லட்சங்களைக் கொட்டிக் கொடுத்தும், தேர்தல் நியாயமாக நடந்து கொண்டதைப் பொறுக்க முடியாதவர்கள், வழக்கு மேல் வழக்குப் போட்டு, ஓட்டு எண்ணுவதைத் தடுத்து வைத்திருக்கின்றனர். எத்தனை நாளைக்கு இப்படியே தொடர முடியும்?

* நேர் வழியில் எதையும் செய்ய முடியாது என்பதால், குறுக்கு வழியில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியை தன்னுடைய நண்பர் மூலம் அணுகினார் நடிகர் ஐசரி கணேஷ். அதை அறிந்து கடுமையாக கண்டித்த நீதிபதி, நடிகர் ஐசரி கணேஷுக்கு பத்து லட்ச ரூபாய் அபராதம் விதித்தார். இது ஊரறிந்த விஷயம்.

* நடிகர் சங்கத்துக்கு கட்டடம் கட்டப்படவிருந்த நிலையில், தனியார் மூலம், நடிகர் சங்க கட்டடம் கட்டும் இடத்தில் பொதுப் பாதை இருக்கிறது. அதை ஆக்கிரமித்து கட்டடம் கட்டுகின்றனர் என சொல்லி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். வழக்கு இன்றும் நிலுவையில் உள்ளது. இதனால், ஓராண்டுக்கும் மேலாக கட்டடப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டது. அது யாரால்? இதை செய்தது நடிகர் எஸ்.வி.சேகர்தானே?

* தாம்பரத்தை அடுத்து இருக்கும் வேங்கடமங்கலம் கிராமத்தில், நடிகர் சங்கத்துக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை நடிகர் சங்க நிர்வாகியாக இருந்த ராதாரவி சட்டத்துக்கு புறம்பாக அதை விற்க முடிவெடுத்து, பெரும் முறைகேட்டில் ஈடுபட்டார். அது தொடர்பான போலீஸ் விசாரணை நடந்து வருகிறது. இதற்கெல்லாம் பின்னணியில் இருப்பது நடிகர் ஐசரி கணேஷ்தான்.

இப்படி ஐசரி கணேஷ், எஸ்.வி.சேகர், ராதரவி ஆகியோரின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து நோட்டீஸ் வெளியிட்டிருக்கும் நடிகர் சங்க மூத்த உறுப்பினர் அனந்த கிருஷ்ணனின் கேள்விகளுக்கு சுவாமி சங்கரதாஸ் அணியினரிடமிருந்து எந்த பதிலும் இல்லை.

இதனால், அடுத்தகட்டமாக என்ன செய்யலாம் என்பது குறித்து பாண்டவர் அணியினர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு இருக்கின்றனர். அநேகமாக, பாண்டவர் அணி தரப்பில், நடிகர் சங்க விவகாரம் தொடர்பாக புது வழக்குகளை தொடுக்கத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
சண்டைக்கு தயார் நிலையில் த்ரிஷாசண்டைக்கு தயார் நிலையில் த்ரிஷா முகம் சுளிக்க வைக்கும் ஸ்ரீரெட்டி முகம் சுளிக்க வைக்கும் ஸ்ரீரெட்டி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

எதிர்க்குரல் - சிங்கார சென்னை ,இந்தியா
17 ஆக, 2019 - 18:18 Report Abuse
எதிர்க்குரல் சேகர், ராதாரவி, பணம் விழுங்கி கணேஷ் இவர்கள் பின்னால் சென்றால் திரைக்கதை ராஜ் பாக்கியத்தை இழப்பார்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in