Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மகனை இழந்த தாய்க்கு புதிய வீடு: மோகன்லால் ஆறுதல்

17 ஆக, 2019 - 12:58 IST
எழுத்தின் அளவு:
Mohanlal-help

இயற்கை சீற்றத்திற்கு முன்னால் எந்த சக்தியும் நிற்க முடியாது என்பதுபோல சமீப நாட்களாக கேரளாவில் கனமழையும் வெள்ளப்பெருக்கும் மக்களை மிகுந்த பாதிப்புக்கு ஆளாக்கி வருகின்றன. இந்த சமயத்தில் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த பினு என்கிற இளைஞர் தனது தாய் மற்றும் குடும்பத்தை பாதுகாப்பு முகாம்களில் தங்க வைத்துவிட்டு, வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக களமிறங்கி செயல்பட்டார். அந்த சமயத்தில் பலரையும் காப்பாற்றிய அவர், எதிர்பாராத விதமாக வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தார் இது கேரள மக்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

திரையுலக பிரபலங்கள் பலரும் இவரது மறைவுக்கு தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஜெயசூர்யா இவரது குடும்பத்திற்கு 5 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். இந்த நிலையில் நடிகர் மோகன்லால் பினுவின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி உள்ளதோடு, மகனை இழந்த அந்த குடும்பத்துக்கு புதிய வீடு கட்டி தருவதற்கு தனது விசுவாச சாந்தி அறக்கட்டளையின் மூலம் ஏற்பாடு செய்துள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் இப்படிப்பட்ட ஒரு நல்ல மகனை இந்த சமூகத்திற்கு தந்ததற்காக உங்களுக்கு இன்னொரு மகனாக இந்த கடமையை செய்கிறேன் என்றும் கேரளாவில் உள்ள மூன்றரை கோடி பேர் மனதிலும் உங்கள் மகன் நிறைந்து இருப்பான் என்றும் ஆறுதல் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அம்மாவை எச்சரித்த பிரித்விராஜூக்கு குவியும் கண்டனங்கள்அம்மாவை எச்சரித்த பிரித்விராஜூக்கு ... புற்றுநோய் சிகிச்சைக்கு வைத்திருந்த பணத்தை நிவாரண நிதிக்கு வழங்கிய நடிகை புற்றுநோய் சிகிச்சைக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in