மிஸ் இந்தியா 2022 போட்டியிலிருந்து விலகிய ஷிவானி ராஜசேகர் | திருமண வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ராம் பொத்தினேனி | அடுத்தடுத்து வெளிவர உள்ள பெரிய படங்கள் | தலைநகரம் 2 படப்பிடிப்பு நிறைவு | ஹரிஷ் கல்யாணின் டீசல் | பிரபல காமெடி நடிகர் வெங்கல் ராவ் மருத்துவமனையில் அனுமதி | சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்கும் அர்ச்சனா | சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிக்பாஸ் ஜூலி | இது சூப்பர் ஜோடி : திரவியும் - ஸ்வாதி ஜோடிக்கு ரசிகர்கள் கமெண்ட் | சிம்பு படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
விஜய்சேதுபதி ‛சூப்பர் டீலக்ஸ்' படத்தில் திருநங்கையாக நடித்தார். அப்படி நடித்தபோது தானும் தன்னை திருநங்கையாக உணர்ந்ததாகவும், அவர்களின் வலி நிறைந்த வாழ்க்கை பற்றி அறிந்ததாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில் சுதந்திர தினத்தையொட்டி திருநங்கைகள் 100 பேர் சென்னை கோபாலபுரத்தில் உள்ள மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் 7000 சதுரடியில் அம்பேத்கர் உருவ படத்தை வரைந்தனர். இந்த சாதனை நிகழ்வை விஜய் சேதுபதி தொடங்கி வைத்தார்.
"ஆண், பெண்ணுக்கு உள்ள எல்லா உரிமையும் திருநங்கைகளுக்கு உண்டு. அவர்களை ஒதுக்குவதும், அவமதிப்பதும் சமூக குற்றம். இப்போது நிலைமை மாறிவருகிறது. திருநங்கைகளை மதிக்கும் சமுதாயம் உருவாகி வருகிறது. அவர்களது சாதனைகள் இன்னும் தொடர வேண்டும். அதற்காக வாழ்த்துகிறேன்" என்றார் விஜய் சேதுபதி.