‛வாரியர்' விழாவில் கலந்து கொள்ளும் 28 பிரபலங்கள் | மீண்டும் ஹீரோவாக நடிக்கும் சவுந்தர்ராஜா | அரசு பள்ளிகளில் மாதம் ஒரு சினிமா: தமிழக அரசு முடிவு | பார்த்திபன் படத்திற்கு விருது | நேர்மையாக வரி செலுத்துபவர்: மஞ்சுவாரியருக்கு மத்திய அரசு நற்சான்றிதழ் | கார்த்தி, விஷாலுக்கு கொலை மிரட்டல்: போலீசில் புகார் | இயக்குனர் லீனா மீது முஸ்லிம் நடிகை கடும் தாக்கு | ஜுலை 8ம் தேதி 9 படங்கள் ரிலீஸ் | இளைஞர்களை உசுப்பேற்றும் லீசா எக்லேர்ஸ்! வைரல் ரீல்ஸ் வீடியோ | முன்னாள் கணவருக்கு காஜல் பசுபதி பிறந்தநாள் வாழ்த்து! |
பிக்பாஸ் சீசன் 2வில் கடைசி நிமிடத்தில் டைட்டிலை இழந்தவர் ஐஸ்வர்யா தத்தா. பிக்பாசுக்கு முன்பு தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், பாயும்புலி, அச்சாரம், ஆறாது சினம், சத்ரியன், மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன படங்களில் நடித்தார். நடித்து வெளிவந்த படங்களும் ஓடவில்லை. புதிய வாய்ப்புகளும் இல்லை என்கிற நிலையில்தான் பிக்பாஸ் வீட்டுக்குள் போனார்.
பிக்பாசுக்கு பிறகு ஓரளவுக்கு விளம்பரமாகி விட்டதால் ‛கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவண்டா, அலேகா, கன்னித்தீவு' என வாய்ப்புகள் வரிசை கட்டின. ஆனால் எந்த படமும் வெளிவரவில்லை. இந்த நிலையில் ஐஸ்வர்யா, 5 ஹீரோயின்களில் ஒருவராக நடிக்கும் படம் பொல்லாத உலகில் பயங்கர கேம்.
மொட்டை ராஜேந்திரன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். பிக்பாஸ் ஜூலி இன்னொரு நாயகியாக நடிக்கிறார். இதனை ‛தாதா 87' படத்தை இயக்கிய விஜய்ஸ்ரீ இயக்குகிறார்.
படம் பற்றி அவர் கூறியதாவது: பப்ஜி கேம் மாதிரி ஒரு விபரீத மரண விளையாட்டில் 5 பேர் ஈடுபடுகிறார்கள். அதில் வரும் சிக்கல்களும், அவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள், ஜெயிக்கிறார்கள் என்பதும்தான் கதை. என்றார்.