நகுல் நடிக்கும் புதிய படம் ‛நிற்க அதற்கு தக' | இறைவன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரூ.300 கோடி பட்ஜெட்டில் திரைப்படமாக உருவாகும் சக்திமான்! | வெளியானது பாவனா 86வது படத்தின் பர்ஸ்ட் லுக்! | மீண்டும் தமிழில் நடிக்கும் ஈஷா ரெப்பா | அகத்தியரின் மருத்துவ ரகசியம் சொல்லும் ‛பெல்' | தமிழில் ஹீரோயின் ஆன மலையாள நடிகை | கனிமொழியுடன் லிங்குசாமி திடீர் சந்திப்பு | கேரளாவில் தியேட்டர்கள் ஸ்டிரைக் | விருதுகளை பாத்ரூம் கதவின் கைபிடியாக்குவேன் : நசுருதீன் ஷா |
மறைந்த பழம்பெரும் நடிகை ராஜசுலோச்சனாவின் 85வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. சென்னை விண்டேஜ், ஹரிடேஜ் அமைப்பும், ஸ்பாட்லைட் ரோட்டரி கிளப்பும் இணைந்து இதனை கொண்டாடியது. இந்த விழாவில் ஊனமுற்ற ஏழை பெண்களுக்கு மூன்று சக்கர சைக்கிள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
அதோடு, நடிகை கே.ஆர்.விஜயாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இதனை ராஜசுலோச்சனாவின் குடும்பத்தினரும், விண்டேஜ், ஹரிடேஜ் அமைப்பினரும் இணைந்து வழங்கினார்கள். விழாவில் நடிகைகள் வெண்ணிற ஆடை நிர்மலா, குமாரி சச்சு, எம்.என்.ராஜம், சத்யபிரியா, நடிகர் பானுசந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.