ஷாங்காய் திரைப்பட விழாவில் அப்பத்தா | நான் எப்போதுமே காமெடியன்தான்: யோகி பாபு | பான் இந்தியா படமான தக்ஸ் | 11 கோடியில் விஷ்ணுவர்த்தன் நினைவிடம் : முதல்வர் பொம்மை திறந்து வைத்தார் | 'பெதுருலங்கா 2012' படப்பிடிப்பு நிறைவு | 'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத் | பாலகிருஷ்ணா பட இயக்குனரைப் பாராட்டிய ரஜினிகாந்த் | அதிவேக சாதனையில் 'பதான்' | சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் |
சென்னை: பிக்பாஸ் வீட்டின் பைவ் ஸ்டார் அணிக்கு ரசிகர்களிடயே பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
சண்டை சச்சரவுகள் நிறைந்த பிக் பாஸ் வீட்டின் ஒரே ஆறுதல் சாண்டி அண்ட் கோ மட்டும் தான். மற்றவர்களை கேலி செய்வது மட்டுமல்லாமல் தங்களுக்குள்ளே காமெடி செய்து சிரிப்பது, புதிது புதிதாக பாட்டு கம்போஸ் செய்வது என அவர்களின் அலப்பறைகள் தான் பிக்பாஸ் ஷோவின் ரியல் எண்டர்டெயினர்.
சாண்டி, கவின், முகென், தர்ஷன் ஆகிய நான்கு பசங்களுடன் லாஸ்லியாவும் இணைந்த இந்த அணிக்கு ரசிகர்கள் பைவ் ஸ்டார் என பெயர் வைத்துள்ளனர். இரு தினங்களுக்கு முன்னர் ஒளிபரப்பான எபிசோடில், இவர்கள் ஐந்து பேரும் வரிசையாக அமர்ந்து கொண்டு பத்ரி பட விவேக் பாணியில் வனிதாவை கேலி செய்தது செம ஹிட்டானது.
இந்த போட்டோ வைத்து நெட்டிசன்கள் தங்களுடைய கற்பனைக்குதிரையை அவிழ்த்துவிட்டு, இஷ்டத்துக்கு டிசைன் செய்து வருகின்றனர். அவெஞ்சர்ஸ் பட கேரக்டர்களை இவர்களுடன் பொருத்தி உருவாக்கப்பட்ட போஸ்டர் வைரலானது.
அதேபோல் பைவ் ஸ்டார் படத்தில் இடம்பெற்ற 5 ஸ்டார் 5ஸ்டார் ஓலேஓலே பாட்டுக்கு இவர்களின் பிக்பாஸ் காட்சிகளை வைத்து எடிட் செய்யப்பட்ட வீடியோவையும் நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர். இப்படியாக ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது இந்த கேங்.
இந்த வார எவிக்ஷனில் லாஸ்லியா, கவில், முகென் ஆகிய மூன்று பேரும் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். எனவெ இந்த வார இறுதிக்கு பிறகு தான் இந்த கேங் 5 ஸ்டாராகவே தொடர்கிறதா அல்லது 4 ஸ்டாராக குறைகிறதா என்பது தெரியவரும்.