உணர்ச்சிக் குவியலாய் வந்துள்ள 'பொன்னியின் செல்வன் 2' டிரைலர் | ‛பொன்னியின் செல்வன் 2' இசை வெளியீடு கோலாகலம் : சிவப்பு கம்பள வரவேற்பில் நனைந்த திரைப்பிரபலங்கள் | டப்பிங் யூனியன் சீல் அகற்றம் | ஒய் திஸ் கொலவெறி பாடலுடன் நாட்டு நாட்டு பாடலை ஒப்பிட்ட கீரவாணி | விடுதலை படம் சிறந்த கற்றல் அனுபவமாக இருந்தது : பவானி ஸ்ரீ | மார்ச் 31ல் ஆர்யாவின் அடுத்த பட டீசர் வெளியீடு | மீண்டும் சர்ச்சையில் நாக சைதன்யா, ஷோபிதா காதல் | போலா 2ம் பாகத்திற்கு லீட் கொடுத்த அபிஷேக் பச்சனின் சர்ப்ரைஸ் என்ட்ரி | இளையராஜா இசையில் ஹிந்தியில் உருவான மியூசிக் ஸ்கூல் | இறப்பதற்கு முன் மஞ்சு வாரியரிடம் இன்னொசென்ட் சொன்ன கடைசி வார்த்தை |
சென்னை : நடிகை வனிதாவுக்கு வத்திக்குச்சி என பட்டப்பெயர் வைத்துள்ளது பிக்பாஸ் வீட்டில் உள்ள இளைஞர் பட்டாளம்.
பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் நுழைந்துள்ள வனிதா, குட்டிக்கலகங்களை ஏற்படுத்தி வருகிறார். ஹவுஸ்மேட்ஸ்கள் இடையே சண்டை மூட்டி விடுகிறார். இதனால் ஒவ்வொரு நாளும் கலவர பூமியாக காட்சியளிக்கிறது பிக்பாஸ் வீடு.
வனிதாவின் வருகை லாஸ்லியா, கவின், சாண்டி, முகென், தர்ஷன் ஆகியோருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்பது அவர்கள் பேசும் போது வெளிப்படுகிறது. இருந்தாலும் தானாக சென்று அவர்களிடம் பேச்சு கொடுக்கிறார் வனிதா.
மற்றவர்களை தூண்டிவிட்டு சண்டை மூட்டி விடுவது, சமயங்களில் தானே நேரடியாக களத்தில் இறங்கி வம்பிழுப்பது என வனிதாவின் அலப்பறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.
இதனால் கடுப்பான லாஸ்லியா கேங், வனிதாவுக்கு வத்திக்குச்சி என பட்டப்பெயர் வைத்துள்ளனர். ஏற்கனவே கஸ்தூரிக்கு காக்கா என பட்டப்பெயர் வைத்தார் கவின். புறணி பேசும் போது பெரும்பாலும் அந்தப் பெயரை தான் பயன்படுத்துகின்றனர். இனி வனிதாவையும் பட்டப்பெயர் கொண்டே அழைக்கப் போகிறது இளைஞர் பட்டாளம்.