Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எம்மதமும் சம்மதம்: கிண்டலடித்தவருக்கு மாதவன் பதிலடி

16 ஆக, 2019 - 16:00 IST
எழுத்தின் அளவு:
Madhavan-replied-who-trolled-him?

ஆகஸ்ட் 15ம் தேதியான நேற்று சுதந்திர நாள், ரக்ஷா பந்தன், ஆவணி அவிட்டம் ஆகிய நாட்களுக்கு வாழ்த்து கூறி, தன் அப்பா, மகன் ஆகியோருடன் வீட்டில் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார் நடிகர் மாதவன்.

அவரது பூஜை அறையில் சிலுவை ஒன்று இருந்ததைக் கண்டு ரசிகர் ஒருவர், “பின்னணியில் அவர்கள் ஏன் சிலுவையை வைத்திருக்க வேண்டும். இது மந்திர் ஆ?. நீங்கள் எனது மதிப்பை இழந்துவிட்டீர்கள். கிறிஸ்துவ சர்ச்சுகளில் இந்து கடவுள்களைப் பார்த்திருக்கிறீர்களா, இது அனைத்தும் போலியான டிராமா, இன்று நீங்கள் நிகழ்த்தியுள்ளீர்கள்,” என்று கமெண்ட் செய்திருந்தார்.

அதற்கு மாதவன் நீண்ட விளக்கம் ஒன்றைக் கொடுத்திருக்கிறார். அதில்,

“உங்களைப் போன்றவர்களிடமிருந்து நான் எந்த மரியாதையையும் எதிர்பார்க்கவில்லை. நீங்கள் சீக்கிரமே குணமடைவீர்கள் என நம்புகிறேன். கோல்டன் டெம்பிள் படமும் பின்னாடி இருப்பதை, நீங்கள் பார்க்கவில்லையா. நான் சீக்கிய மதத்திற்கு மாறிவிட்டேன் என்று கேட்கவில்லையா.

உலகத்தில் உள்ள எல்லா புனித இடங்களிலும் நான் ஆசீர்வாதம் பெற்றிருக்கிறேன். தர்காவிலிருந்தும் பெற்றுள்ளேன். சில வாங்கப்பட்டவை, சில பரிசாகப் பெற்றவை.

எங்களது வீட்டில் பொதுவான நம்பிக்கையும், அனைத்தையும் கும்பிடும் வழக்கம் உண்டு. எனது சிறு வயதிலிருந்தே எனக்கான அடையாளத்தையும், அடுத்தவர்களின் மத நம்பிக்கையை மதிக்கும் அளவிற்கும் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.

எம்மதமும் சம்மதம். அதை எனது மகனும் பின்பற்றுவார் என நம்புகிறேன். கோயில்கள் இல்லாத இடத்தில் நான் ஒவ்வொரு தர்கா, குருத்வாரா, சர்ச் ஆகியவற்றிற்குச் சென்று பிரார்த்தனை செய்துள்ளேன்.

நான் இந்து என்று தெரிந்திருந்தும் அவர்கள் என் மீது அளவுக்கதிகமான மரியாதையை என்னிடம் காட்டியுள்ளார்கள். அதற்கு நான் என்ன கைமாறு செய்யப் போகிறேன்.

எனது பரந்த பயணம் மற்றும் அனுபவத்தில் அதிகமான அன்பையும் மரியாதையையும் மற்றவர்களுக்குக் கொடுக்க வைத்திருக்கிறேன். அதுதான் உண்மையான நம்பிக்கையும் கூட,” என பதிவிட்டிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (65) கருத்தைப் பதிவு செய்ய
நயன்தாரா பற்றி பரவும் மீம்ஸ்நயன்தாரா பற்றி பரவும் மீம்ஸ் வத்திக்குச்சி வனிதா வத்திக்குச்சி வனிதா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (65)

venkat Iyer - nagai,இந்தியா
19 ஆக, 2019 - 21:11 Report Abuse
venkat Iyer நாம் அனைவரும் சமுக நல்லிணக்கத்துடன் வெளியில் நடப்பது இயல்பானதுதான்.மாதவன் தான் அனைத்து மதமும் சமம் என்று ஆவணி அவிட்டம் போது பேசுவதோடு மற்ற மதத்தின் அடையாளங்களை வைத்ததுதான் மனதுக்கு சங்கடமாக உள்ளது.மாதவன் ஒரு பிராமணர்.அவர் பிராமணர்களது மனு தர்ம கொள்கையை கேளிக்கூத்தாக்குகிறார்.
Rate this:
PANDA PANDI - Aththipatti,இந்தியா
19 ஆக, 2019 - 04:56 Report Abuse
PANDA PANDI மாதவ நீ மனிதன். அறிவுஜீவி வெங்கட்டு. பெயர் ஒன்று போதும் உன் தரம் எளிதில் விளங்கிடும். ஓசி சாதம் சாப்பிடுவாராரு தான நீ.
Rate this:
venkat Iyer - nagai,இந்தியா
18 ஆக, 2019 - 11:35 Report Abuse
venkat Iyer நான் ஒரு கருத்து தெரிவித்ததற்கு தனது பெயரை கூட போட முடியாமல் மறைத்து எதிர்க்குரல்,சிங்கார சென்னை என்ற பெயரில் கருத்து ஒருவர் கூறியிருந்தார். அதில் மாதவன் சொந்த முயற்சியில் சினிமாவில் வெற்றி பெற்றுள்ளதாக கூறியுள்ளார். அவருக்கு ஒரு உந்துதல் கொடுத்தது முன்னொர்கள் கொடுத்த நெறிமுறைகளும் பல்வேறு கட்டுப்பாடுகளும்தான் காரணம். காலத்தின் நீட்சியால் சினிமாத்துறையில் இருப்பதால் அவர் மற்றவர்களின் கவனத்தினை திருப்ப முயற்சிக்கலாம். நமது பூமியில் ஏகலைவனாக கடவுள் யாரையும் படைக்கவில்லை. ஆண் பெண் இருவரது முயற்சியின் தயவால் நீயே படைக்கப்படுகிறாய். நீங்கள் குழந்தை முதல் வளர்க்கப்படும் காலத்தில் பல்வேறு நெறி முறைகளை கடைபிடித்தால் உங்களை சிறப்பிடம் பெற வைக்கின்றது. நீங்கள் அனைத்து மதங்களின் நடைமுறைகளையும் மதித்து வாழ்பவன் என்றால், உங்களிடம் கொள்கைபிடிப்பு எதுவுமே இருக்காது. அது காட்டுமிராண்டி தன்மையை கொடுத்து இருக்கும்.. உயிரை கொள்வது மகா பாவம் என்பதை பிராமணர்களின் மனுதர்மம் சொல்கிறது. உயிரை கொன்றுவிட்டு ஒன்றை ஓதினால் கொள்வது பாவமில்லை என்று முஸ்லிம மதம் சொல்கிறது. இதுவே பாவமன்னிப்பு கேட்டுவிட்டால் பாவம் விட்டு விடும் என்று பைபிளில் சுட்டிகாட்டுகிறது. இந்து கொள்கையில் பிடிப்பு இல்லாத எடக்கு நாட்டான்கள் கொன்ற பாவத்தினை தின்றால் போச்சு என்று சொல்கின்றன.உங்கள் மூதாதையர் பின்பற்றியதை தொடர்ந்து பின்பற்று என்று மனுதர்மம் சொல்கிறது.மாதவன் பல படங்களில் புலால் உணவை எதிர்த்து சினிமாவில் பேசியிருப்பார். மனதில் இருப்பதை அவரும் விரும்பி பேசியிருக்க கூடும். இதன் மூலம் மற்ற மதத்தின் கொள்கையை ஏற்புடையதாக வைக்கவில்லை. பல மதத்தின் அடையாளத்தினை சமுக நல்லிணக்கத் திற்காக வைத்து உள்ளார்.
Rate this:
venkat Iyer - nagai,இந்தியா
18 ஆக, 2019 - 09:12 Report Abuse
venkat Iyer மாதவன் சொந்த முயற்சியில் சினிமாவில் வெற்றி பெற்றுள்ளதாக கூறியுள்ளார்.அவருக்கு ஒரு உந்துதல் கொடுத்தது முன்னொர்கள் கொடுத்த நெறிமுறைகளும் பல்வேறு கட்டுப்பாடுகளும்தான் காரணம்.காலத்தின் நீட்சியால் சினிமாத்துறையில் இருப்பதால் அவர் மற்றவர்களின் கவனத்தினை திருப்ப முயற்சிக்கலாம்.நமது பூமியில் ஏகலைவனாக கடவுள் யாரையும் படைக்கவில்லை.ஆண் பெண் இருவரது முயற்சியின் தயவால் நீயே படைக்கப்படுகிறாய்.நீங்கள் குழந்தை முதல் வளர்க்கப்படும் காலத்தில் பல்வேறு நெறி முறைகளை கடைபிடித்தால் உங்களை சிறப்பிடம் பெற வைக்கின்றது.நீங்கள் அனைத்து மதங்களின் நடைமுறைகளையும் மதித்து வாழ்பவன் என்றால் ,உங்களிடம் கொள்கைபிடிப்பு எதுவுமே இருக்காது.அது காட்டுமிராண்டி தன்மையை கொடுத்து இருக்கும்..உயிரை கொள்வது மகா பாவம் என்பதை பிராமணர்களின் மனுதர்மம் சொல்கிறது.உயிரை கொன்றுவிட்டு ஒன்றை ஓதினால் கொள்வது பாவமில்லை என்று முஸ்லிம மதம் சொல்கிறது.இதுவே பாவமன்னிப்பு கேட்டுவிட்டால் பாவம் விட்டு விடும் என்று பைபிளில் சுட்டிகாட்டுகிறது. இந்து கொள்கையில் பிடிப்பு இல்லாத எடக்கு நாட்டான்கள் கொன்ற பாவத்தினை தின்றால் போச்சு என்று சொல்கின்றன.உங்கள் மூதாதையர் பின்பற்றியதை தொடர்ந்து பின்பற்று என்று மனுதர்மம் சொல்கிறது.மாதவன் பல படங்களில் புலால் உணவை எதிர்த்து சினிமாவில் பேசியிருப்பார்.மனதில் இருப்பதை அவரும் விரும்பி பேசியிருக்க கூடும்.இதன் மூலம் மற்ற மதத்தின் கொள்கையை ஏற்புடையதாக வைக்கவில்லை.மதத்தின் அடையாளத்தினை சமுக நல்லிணக்கத்திற்காக வைத்து உள்ளார்.
Rate this:
Nai-tamlar - chennai,இந்தியா
18 ஆக, 2019 - 08:05 Report Abuse
Nai-tamlar என்டாப்ப்பா மாதவா, எங்க நீங்க, ஒரு பாதிரிட்ட போயி எம்மதமும் சம்மதம் தானேன்னு கேட்டுப்பாருங்களேன் , உங்க / அவங்க யோக்கியதை எப்படின்னு தெரியவரும், உங்களைப் போன்ற நடிகர்களின் பணம் ஏதோ வெளிநாட்டில் வசதியாக மாற்றிக்கொடுப்பதால் தான் நீங்களெல்லாம் அவர்களுக்கு சப்போர்ட் பண்ணுவதுபோல் தெரியுது .... எங்களின் இந்த நாட்டு கடவுள் உங்கள் துரோகத்தை கொண்டு உங்களுக்கும் உங்கள் சந்ததிக்கும் நீதிவழங்கட்டும் ....
Rate this:
மேலும் 60 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Lockup
  • லாக்அப்
  • நடிகர் : வைபவ்
  • நடிகை : வாணி போஜன்
  • இயக்குனர் :சார்லஸ்
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in