'லஸ்ட் ஸ்டோரிஸ் 2' படத்தின் டீசர் வெளியானது! | 'டிஜே டில்லு 2' படத்தின் ரிலீஸ் தேதி இதோ! | திமுக ஸ்டிக்கர் ஒட்ட பார்க்கும் உதயநிதி: நடிகை கஸ்தூரி கடும் விமர்சனம் | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த பிரபாஸ்! | குடும்பத்துடன் மலேசியாவுக்கு டூர் சென்ற ஐஸ்வர்யா ராஜேஷ்! | இளையராஜாவின் காலில் விழுந்து ஆசி பெற்ற அண்ணாமலை! | சுனைனாவின் ரெஜினா டிரைலர் வெளியானது! | தியேட்டர்களில் அனுமனுக்கு ஒரு 'சீட்' ஒதுக்கீடு: ஆதிபுருஷ் படக்குழு அறிவிப்பு | இந்தியன்-2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா?: ரகசியம் காக்கும் படக்குழு | அஜித்துக்கு வில்லனாகும் அர்ஜூன் தாஸ்? |
ஆகஸ்ட் 15ம் தேதியான நேற்று சுதந்திர நாள், ரக்ஷா பந்தன், ஆவணி அவிட்டம் ஆகிய நாட்களுக்கு வாழ்த்து கூறி, தன் அப்பா, மகன் ஆகியோருடன் வீட்டில் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார் நடிகர் மாதவன்.
அவரது பூஜை அறையில் சிலுவை ஒன்று இருந்ததைக் கண்டு ரசிகர் ஒருவர், “பின்னணியில் அவர்கள் ஏன் சிலுவையை வைத்திருக்க வேண்டும். இது மந்திர் ஆ?. நீங்கள் எனது மதிப்பை இழந்துவிட்டீர்கள். கிறிஸ்துவ சர்ச்சுகளில் இந்து கடவுள்களைப் பார்த்திருக்கிறீர்களா, இது அனைத்தும் போலியான டிராமா, இன்று நீங்கள் நிகழ்த்தியுள்ளீர்கள்,” என்று கமெண்ட் செய்திருந்தார்.
அதற்கு மாதவன் நீண்ட விளக்கம் ஒன்றைக் கொடுத்திருக்கிறார். அதில்,
“உங்களைப் போன்றவர்களிடமிருந்து நான் எந்த மரியாதையையும் எதிர்பார்க்கவில்லை. நீங்கள் சீக்கிரமே குணமடைவீர்கள் என நம்புகிறேன். கோல்டன் டெம்பிள் படமும் பின்னாடி இருப்பதை, நீங்கள் பார்க்கவில்லையா. நான் சீக்கிய மதத்திற்கு மாறிவிட்டேன் என்று கேட்கவில்லையா.
உலகத்தில் உள்ள எல்லா புனித இடங்களிலும் நான் ஆசீர்வாதம் பெற்றிருக்கிறேன். தர்காவிலிருந்தும் பெற்றுள்ளேன். சில வாங்கப்பட்டவை, சில பரிசாகப் பெற்றவை.
எங்களது வீட்டில் பொதுவான நம்பிக்கையும், அனைத்தையும் கும்பிடும் வழக்கம் உண்டு. எனது சிறு வயதிலிருந்தே எனக்கான அடையாளத்தையும், அடுத்தவர்களின் மத நம்பிக்கையை மதிக்கும் அளவிற்கும் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.
எம்மதமும் சம்மதம். அதை எனது மகனும் பின்பற்றுவார் என நம்புகிறேன். கோயில்கள் இல்லாத இடத்தில் நான் ஒவ்வொரு தர்கா, குருத்வாரா, சர்ச் ஆகியவற்றிற்குச் சென்று பிரார்த்தனை செய்துள்ளேன்.
நான் இந்து என்று தெரிந்திருந்தும் அவர்கள் என் மீது அளவுக்கதிகமான மரியாதையை என்னிடம் காட்டியுள்ளார்கள். அதற்கு நான் என்ன கைமாறு செய்யப் போகிறேன்.
எனது பரந்த பயணம் மற்றும் அனுபவத்தில் அதிகமான அன்பையும் மரியாதையையும் மற்றவர்களுக்குக் கொடுக்க வைத்திருக்கிறேன். அதுதான் உண்மையான நம்பிக்கையும் கூட,” என பதிவிட்டிருக்கிறார்.