Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

24ம் புலிகேசி: வடிவேலு இடத்தில் யோகி பாபு?

16 ஆக, 2019 - 13:28 IST
எழுத்தின் அளவு:
24am-Pulikesi-:-Yogibabu-in-Vadivelu-place

இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில், வடிவேலு நாயகனாக நடிக்க 'இம்சை அரசன் 24ம் புலிகேசி' படம் ஆரம்பமாகி ஒரு சில நாட்களுடன் நின்றது. வடிவேலுவுக்கும், இயக்குனர் சிம்புதேவனுக்கும் இடையில் பிரச்சினை ஆனதால் அந்தப் படம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது.

படப்பிடிப்பு தாமதப்பட வடிவேலுதான் காரணம், அதனால் அவர் நஷ்ட ஈடு தர வேண்டும் என தயாரிப்பாளர் தரப்பில் பஞ்சாயத்து நடந்தது. பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின் சமீபத்தில் அது முடிவுக்கு வந்தது. வடிவேலு தரப்பில் குறிப்பிட்ட ஒரு தொகையைத் தர சம்மதித்துள்ளனர்.

இருப்பினும் 'இம்சை அரசன் 24ம் புலிகேசி' படத்தில் அவர் நடிக்க மாட்டார் என்றும் முடிவு எடுக்கப்பட்டது. இப்போது அவருக்குப் பதிலாக யோகிபாபு நடிக்கலாம் என்ற தகவல் பரவி வருகிறது.

அவர் சமீபத்தில் எமனாக நடித்த 'தர்மபிரபு' படம் வசூலில் ஓரளவிற்கு லாபத்தைத் தந்ததாம். அக்கதாபாத்திரத்தில் அவர் பொருத்தமாக நடித்ததால் 'இம்சை அரசன் 24ம் புலிகேசி'யிலும் அவர் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறார்களாம். அப்படி நடந்தால் யோகிபாபுவுக்கு நாயகன் அந்தஸ்து மேலும் உயரும்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
‛அந்தாதூன்' தமிழ் ரீ-மேக்கில் பிரஷாந்த்‛அந்தாதூன்' தமிழ் ரீ-மேக்கில் ... இது நமீதா தான், நம்புங்க.... இது நமீதா தான், நம்புங்க....

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
17 ஆக, 2019 - 17:29 Report Abuse
Vasudevan Srinivasan வெற்றி பெற வாழ்த்துக்கள்..
Rate this:
NO-ONE -  ( Posted via: Dinamalar Android App )
16 ஆக, 2019 - 21:16 Report Abuse
NO-ONE இதுக்கு எடுக்காமலே இருக்கலாம்.
Rate this:
orange mittai - Melbourne ,ஆஸ்திரேலியா
16 ஆக, 2019 - 18:59 Report Abuse
orange mittai தரமான சம்பவம்
Rate this:
prem -  ( Posted via: Dinamalar Android App )
16 ஆக, 2019 - 14:07 Report Abuse
prem padam odaathu saamy
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in