Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

‛அந்தாதூன்' தமிழ் ரீ-மேக்கில் பிரஷாந்த்

16 ஆக, 2019 - 12:44 IST
எழுத்தின் அளவு:
Actor-prashanth-in-Andhadhun-remake

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஸ்மான் குரானா, ராதிகா ஆப்தே, தபு நடிப்பில் வெளியான ஹிந்தி படம் அந்தாதூன். சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம், மற்றும் சிறந்த திரைக்கதை உள்ளிட்ட மூன்று தேசிய விருதுகளை வென்ற இப்படம், இந்தியா, சீனாவில் வெளியிடப்பட்டு வசூலிலும் வெற்றி பெற்றது. சில வெளிநாட்டு திரைப்பட விழாக்களிலும் பங்கேற்று விருதுகளை வென்றுள்ளது.

இந்நிலையில் இப்படம் தமிழில் தயாராகிறது. பிரஷாந்த் நாயகனாக நடிக்க, இவரது அப்பா தியாகராஜன் ஹிந்தி உரிமையை வாங்கி தயாரிக்கிறார்.

தியாகராஜன் கூறுகையில், அந்தாதூன் கதை ஒரு பியானோ மாஸ்டரை மையமாகக் கொண்டது. பிரஷாந்த் லண்டன் டிரினிடி இசைக் கல்லூரி மாணவர் என்பதாலும், கைத்தேர்ந்த பியானோ கலைஞர் என்பதாலும் இந்த கதாபாத்திரம் அவருக்கு பொருத்தமாக இருக்கும். இப்படத்திற்கு, இன்னும் பெயர் சூட்டப்படவில்லை என்றாலும் இயக்குனர், பிற நடிகர்கள், தொழிட்நுட்ப வல்லுனர்கள் தேர்வு நடைபெறுகிறது என்றார்.

ஸ்ரீராம் ராகவனின் ‛ஜானி கத்தார்' திரைப்படத்தை ‛ஜானி' என்ற பெயரில் பிரஷாந்த் நாயகனாக நடிக்க தியாகராஜன் ரீ-மேக் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
ஒரே நாளில் 2 படம் ரிலீஸ்: மகிழ்ச்சியில் காஜல்ஒரே நாளில் 2 படம் ரிலீஸ்: ... 24ம் புலிகேசி: வடிவேலு இடத்தில் யோகி பாபு? 24ம் புலிகேசி: வடிவேலு இடத்தில் யோகி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
17 ஆக, 2019 - 12:42 Report Abuse
Mirthika Sathiamoorthi இன்னமும் பிரசாந்த் ரீமேக் கதைகளை ஏன் நம்பி கொண்டிருக்கிறார் என புரியவில்லை...போராடிய அருண்விஜய்யின் தடம் ரீமேக் படம் அல்ல... அவரின் மறுவாழ்வுக்கு அவரின் கதை தேர்வே காரணம்...பொதுவா வெளிநாடுகளில் குழந்தைகள் வளர்க்கும் முறைபற்றிய புத்தகங்கள் விடியோவை பாத்து நம்மூரில் அப்படியே கண்மூடித்தனமாக பலர் அதை பின்பற்றுவர். அந்த கலாச்சாரம், தட்பவெப்பம், கல்வித்திட்டம், உணவுப்பழக்கம், வாழ்க்கைமுறைக்கும் நம் வாழ்வியலுக்கு பொருந்துமா என பார்பதே இல்லை அதில் உள்ள நல்ல விஷயங்களை எடுத்து நம் வாழ்வியலுக்கு ஏற்ப்ப மாற்றி முயற்சிக்க மாட்டார்கள்...அப்பாடியே காப்பி அடித்து அதுதான் சிறந்ததுன்னு சொல்லுவாங்க....அதே போல தான் ரீமேக்கும் அந்த மாநில ரசனைக்கும் உள்ளூர் ரசனைக்கும் சம்பந்தமே இல்லாமல் ஒரு வெற்றிபடத்தை அப்படியே காப்பி அடிப்பதும் எத்தனையோ ரீமேக் படங்கள் தோல்வி இதற்க்கு மிகபெரிய உதாரணம்.. மறுபடியும் அதே தவறை பிரசாந்தின் தந்தைக்குளம் செய்கிறது..ஒருவேளை நேர்கொண்ட பார்வையின் தாக்கம் அவரை அதை செய்ய தூண்டியது? .மொத்தத்தில் பிரசாந்த் ரீமேக் பிரசாந்தாக மாற்றுகிறார் தியாகராஜன்...
Rate this:
17 ஆக, 2019 - 04:05 Report Abuse
மடையன் அடப்பாவி ... ஜூலாய் படத்த குட்டிச்சுவராக்கி கெடுத்த மாதிரி இப்ப அந்தாதூனா ....பிராசாந்த் செட்டாகமாட்டான் .. அதுக்கு கரெக்டான ஆளு அட்டகத்தி தினேஷ் ..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in