ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் உருவாகும் 1947 | கன்னடத்தில் திரிஷ்யம் 2 : பி வாசு இயக்குகிறார் | அகோரியாக அதிரவைக்கும் பாலகிருஷ்ணா | ரிலீஸ் தேதியுடன் ஜூனியர் என்டிஆரின் புதுப்பட அறிவிப்பு | ராதே ஷ்யாம் புதிய போஸ்டர் வெளியீடு | கர்ணன் - தவறை சுட்டிக்காட்டிய உதயநிதி | கொரோனாவிலிந்து மீண்டுவிட்டோம் - மாதவன் | சாந்தி வாழ்க்கை படம் துவங்கியது | தனுஷிற்கு ஜோடியாகும் உப்பெனா நாயகி | கபடி பயிற்சியில் துருவ் விக்ரம் |
ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஸ்மான் குரானா, ராதிகா ஆப்தே, தபு நடிப்பில் வெளியான ஹிந்தி படம் அந்தாதூன். சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம், மற்றும் சிறந்த திரைக்கதை உள்ளிட்ட மூன்று தேசிய விருதுகளை வென்ற இப்படம், இந்தியா, சீனாவில் வெளியிடப்பட்டு வசூலிலும் வெற்றி பெற்றது. சில வெளிநாட்டு திரைப்பட விழாக்களிலும் பங்கேற்று விருதுகளை வென்றுள்ளது.
இந்நிலையில் இப்படம் தமிழில் தயாராகிறது. பிரஷாந்த் நாயகனாக நடிக்க, இவரது அப்பா தியாகராஜன் ஹிந்தி உரிமையை வாங்கி தயாரிக்கிறார்.
தியாகராஜன் கூறுகையில், அந்தாதூன் கதை ஒரு பியானோ மாஸ்டரை மையமாகக் கொண்டது. பிரஷாந்த் லண்டன் டிரினிடி இசைக் கல்லூரி மாணவர் என்பதாலும், கைத்தேர்ந்த பியானோ கலைஞர் என்பதாலும் இந்த கதாபாத்திரம் அவருக்கு பொருத்தமாக இருக்கும். இப்படத்திற்கு, இன்னும் பெயர் சூட்டப்படவில்லை என்றாலும் இயக்குனர், பிற நடிகர்கள், தொழிட்நுட்ப வல்லுனர்கள் தேர்வு நடைபெறுகிறது என்றார்.
ஸ்ரீராம் ராகவனின் ‛ஜானி கத்தார்' திரைப்படத்தை ‛ஜானி' என்ற பெயரில் பிரஷாந்த் நாயகனாக நடிக்க தியாகராஜன் ரீ-மேக் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.