Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தெலுங்கில் இரண்டாவது கதாநாயகனாக அதர்வா

16 ஆக, 2019 - 11:40 IST
எழுத்தின் அளவு:
Atharva-as-second-hero-in-Telugu-film

தமிழில் பாணா காத்தாடி படம் மூலம் நாயகனாக அறிமுகமானவர் மறைந்த நடிகர் முரளியின் மகன் அதர்வா. பாலா இயக்கத்தில் பரதேசி படத்தில் நடித்து அவருடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார். இருப்பினும் அதன்பின் அவர் நடித்து வந்த படங்களில் ஈட்டி படம் மட்டும் கொஞ்சம் சுமாராக ஓடியது.

நயன்தாராவிற்கு முக்கியத்தும் அதிகமிருந்த இமைக்கா நொடிகள் படத்தில் ஏறக்குறைய இரண்டாவது கதாநாயகனாகத்தான் அவர் தெரிந்தார். அந்தப் படம் நன்றாக ஓடினாலும், அதன் பெயர் அனைத்தும் நயன்தாராவிற்குத்தான் போனது. அந்தப் படத்திற்குப் பிறகு அவர்நாயகனாக நடித்த பூமராங், 100 ஆகிய படங்கள் ஓடவில்லை. தற்போது தமிழில் ஒத்தைக்கு ஒத்தை, குருதி ஆட்டம் படங்களில் நடித்து வருகிறார்.

இதனிடையே, தெலுங்கில் வால்மீகி என்ற படத்தில் இரண்டாவது கதாநாயகனாக அறிமுகமாகிறார். வால்மீகி படம் தமிழில் வெளிவந்த ஜிகர்தண்டா படத்தின் ரீமேக். தமிழில் சித்தார்த் நடித்த கதாபாத்திரத்தில் அதர்வா நடிக்கிறார். பாபிசிம்ஹா நடித்த கதாபாத்திரத்தில் வருண்தேஜ் நடிக்கிறார். பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கிறார்.

இப்படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.




Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கோமாளி - கதைத் திருட்டு சர்ச்சை, நன்றிக்கு ஒரு கார்டு, நக்கலுக்கு மற்றொரு கார்டுகோமாளி - கதைத் திருட்டு சர்ச்சை, ... வெப்சீரிஸ் படப்பிடிப்பில் சமந்தா வெப்சீரிஸ் படப்பிடிப்பில் சமந்தா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in