ரொமான்டிக் ரவுடியாக யோகிபாபு | விஷாலுக்கு வில்லன் ஆகும் ஆர்யா | கன்னியாகுமரி கோவிலில் நயன்தாரா: மூக்குத்தி அம்மனுக்காக விரதம் தொடங்கினார் | ரூ.20 லட்சம் இழப்பீடு கோரி மகாநதி ஷோபனா வழக்கு | 'நான்அப்படிப்பட்டவள் அல்ல! | நடிகையின் சமூக விழிப்புணர்வு! | சிறப்பான கதாபாத்திரம்! | 'மியூசிக் டூர்' போகும் படக்குழு! | புராண படத்தில் ஆரி! | துப்பறியும் வேடத்தில் ஸ்ருதி |
பெண்களுக்காக மலிவு விலை நாப்கின் தயாரித்து பத்ம ஸ்ரீ விருது பெற்றவர் கோவையை சேர்ந்த அருணாசலம் முருகானந்தம். இவருடைய வாழ்க்கையை மையமாக வைத்து இந்தியில் பேட்மேன் என்ற தலைப்பில், பால்கி இயக்கத்தில் திரைப்படம் உருவானது.
இதில் அருணாசலம் முருகானந்தம் கதாபாத்திரத்தில் நடிகர் அக்ஷய் குமார் நடித்திருந்தார். இந்நிலையில் இந்த படம் தேசிய விருதை வென்றுள்ளது.
இது குறித்து, அருணாசலம் முருகானந்தம் பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது: பேட்மேன் படம் தமிழ் மொழியில் படமாக்கும் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் அது நிறைவேறும். அப்போது நடிகர் தனுஷ், என்னுடைய கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும். இது, நடிகர் தனுஷுக்கு என்னுடைய வேண்டுகோள்.
இவ்வாறு அருணாசலம் முருகானந்தம் கூறியிருக்கிறார்.