Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டாரா முகென்?

15 ஆக, 2019 - 15:00 IST
எழுத்தின் அளவு:
Mugen-out-from-Biggboss.?

சென்னை: பிக்பாஸ் வீட்டில் வனிதாவை அடித்ததால், முகென் ரெட் கார்டு கொடுத்து வெளியில் அனுப்பப்பட்டதாக ஒரு தகவல் பரவி வருகிறது.

பிக்பாஸ் வீட்டில் சிறப்பு விருந்தினராக வந்துள்ள வனிதா, தினமும் ஏதாவது பிரச்சினைகளை ஏற்படுத்திய வண்ணமே இருக்கிறார். பிக்பாஸ் வீட்டை விட்டு இரண்டாவது போட்டியாளராக வெளியேறிய பின், அவர், அபி பற்றிய மீம்ஸ்களைத் தான் அதிகம் பகிர்ந்து வந்தார். இதனால் மீண்டும் வீட்டிற்குள் சென்ற உடனேயே, அபியைத் தான் அவர் முதலில் டார்கெட் செய்தார்.

முகெனுக்கும், அபிக்கும் பிரச்சினையை உண்டாக்கினார். இதில் முகென் ஆவேசப்பட்டு சேரைத் தூக்கி அடிக்கும் அளவிற்குப் போனார். பின்னர் ஒரு வழியாக அந்தப் பிரச்சினை முடிந்தது. நேற்று கவினையும், மதுவையும் வைத்து வம்பிழுத்தார் வனிதா. இதனால் பிக்பாஸ் வீடு சண்டைக்களமாக மாறியது.

இந்நிலையில், சண்டை ஒன்றில் முகென் வனிதாவை கன்னத்தில் அறைந்து விட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சரவணனைப் போலவே, முகெனையும் அதிரடியாக ரெட் கார்டு கொடுத்து பிக்பாஸ் வெளியில் அனுப்பி விட்டதாக சமூகவலைதளங்களில் ஒரு தகவல் உலா வருகிறது. இது எந்தளவிற்கு உண்மை எனத் தெரியவில்லை. ஆனால் இந்தச் செய்தி காட்டுத்தீயாக இணையத்தில் பரவி வருகிறது. முகெனுக்கு ஆதரவாகவும், வனிதா மற்றும் பிக் பாஸுக்கு எதிராகவும் பலர் டுவீட் வெளியிட்டு வருகின்றனர்.

சக போட்டியாளர்களிடம் வன்முறையைப் பயன்படுத்தக் கூடாது என்ற விதி பிக்பாஸ் வீட்டில் இருக்கிறது. கடந்த சீசனிலும் கூட, டேனியிடம் வன்முறையாக நடந்து கொண்டதற்காக மஹத் ரெட் கார்டு கொடுத்து வெளியில் அனுப்பப் பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
முதல் வாரமே கஸ்தூரிக்கு இப்படி ஒரு தண்டனையா?முதல் வாரமே கஸ்தூரிக்கு இப்படி ஒரு ... என்னுடைய கேரக்டரில் தனுஷ்: அருணாசலம் முருகானந்தம் என்னுடைய கேரக்டரில் தனுஷ்: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

sri - trichy,இந்தியா
21 ஆக, 2019 - 11:55 Report Abuse
sri ஆகா SUPER மச்சி ரொம்ப இன்டெரெஸ்டிங்கா இருக்கும் போல கற்பூரம் இல்லையா வாத்திக்குச்சி பக்கத்துல வந்தவுடன் பதிக்குச்சு.
Rate this:
Bharatha Nesan - Chennai,இந்தியா
21 ஆக, 2019 - 10:42 Report Abuse
Bharatha Nesan பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் நான் 3 பெண்களிடம் குடும்பம் நடத்தினேன், நீங்கள் எல்லோரும் என்னைப்போல் இருமடங்காக 6 பெண்களுடன்/ஆண்களுடன் குடும்பம் நடத்துங்கள் என பரப்புகிறாரோ? அனைவருக்கும் இந்த தகவலை கொண்டுசேருங்கள் அன்பான நண்பர்களே. நன்றி.
Rate this:
Bharatha Nesan - Chennai,இந்தியா
20 ஆக, 2019 - 20:34 Report Abuse
Bharatha Nesan பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் நான் 3 பெண்களிடம் குடும்பம் நடத்தினேன், நீங்கள் எல்லோரும் என்னைப்போல் இருமடங்காக 6 பெண்களுடன்/ஆண்களுடன் குடும்பம் நடத்துங்கள் என பரப்புகிறாரோ? அனைவருக்கும் இந்த தகவலை கொண்டுசேருங்கள் அன்பான நண்பர்களே. நன்றி.
Rate this:
v.sakthi -  ( Posted via: Dinamalar Android App )
15 ஆக, 2019 - 20:42 Report Abuse
v.sakthi இது ஒரு மானங்கெட்ட , மக்களை முட்டாளாக்கும் சீரியம்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in