Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கென்னடி கிளப் தள்ளிப்போனது ஏன்? சுசீந்திரன் விளக்கம்

15 ஆக, 2019 - 11:39 IST
எழுத்தின் அளவு:
Why-Kennedy-club-postponed-to-one-week

பெண்கள் கபடியை மையமாக வைத்து, சுசீந்திரன் இயக்கி உள்ள படம் கென்னடி கிளப். பாரதிராஜா, சசிகுமார், அறிமுக நடிகை லட்சுமி கோவிந்தராஜன் உள்பட பலர் நடித்துள்ளனர். இமான் இசை அமைத்துள்ளார். இந்தப் படம் இன்று(ஆக.,15) வெளிவருவதாக இருந்தது. ஆனால் அடுத்து வாரத்திற்கு தள்ளிப்போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுசீந்திரன் கூறியதாவது: கென்னடி கிளப்பை சுதந்திர தினத்தில் வெளியிட எல்லா ஏற்பாடுகளும் செய்தோம். அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை தொடர்ந்து தியேட்டரில் இருக்கிறது. ஜெயம் ரவி நடித்த கோமாளி படம் வெளிவருகிறது. இதனால் எங்களுக்கு குறைந்த அளவிலான தியேட்டர்களே கிடைக்கும் வாய்ப்பு இருந்தது. பெரிய பட்ஜெட்டில் தயாராகி உள்ள படத்தை நிறைய தியேட்டர்களில் திரையிட விரும்பினோம்.

நான் இயக்கிய ‛பாண்டியநாடு' படம் வெற்றிப்படமாக இருந்தாலும் அது பெரிய படங்களோடு வந்ததால் பெரிய வசூலைத் தரவில்லை. அப்படியொரு சூழ்நிலை கென்னடி கிளப்புக்கு வரக்கூடாது என்பதற்காக ஒரு வாரம் தள்ளி வைத்தோம். கடும் உழைப்பில் உருவாகி உள்ள படம் எப்போது வந்தாலும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சுந்தர்.சி இயக்கதில் விஷாலின் ஆக்ஷன்சுந்தர்.சி இயக்கதில் விஷாலின் ஆக்ஷன் ஒரே தலைப்பில் தயாராகும் 2 படங்கள் ஒரே தலைப்பில் தயாராகும் 2 படங்கள்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in