Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தன்னை ஹீரோவாக்கிய கலைஞானத்துக்கு வீடு வாங்கி தரும் ரஜினி

15 ஆக, 2019 - 10:25 IST
எழுத்தின் அளவு:
Rajini-to-gift-House-to-Story-writer-Kalaiganam-who-introduce-Rajini-as-hero

பழம்பெரும் கதாசிரியர் மற்றும் தயாரிப்பாளர் கலைஞானத்திற்கு 90 வயதாகிறது. அவரது சினிமா பயணம் தொடங்கி 75 ஆண்டுகள் ஆகிறது. பைரவி படத்தின் மூலம் ரஜினிகாந்தை ஹீரோவாக அறிமுகப்படுத்தியவர். இதையொட்டி அவருக்கு தமிழ் கலாச்சார பண்பாட்டு பேரவை சார்பில் பாராட்டு விழா நடந்தது.

இந்த அமைப்பின் தலைவர் பாரதிராஜா தலைமை தாங்கினார். கே.பாக்யராஜ், கே.ஆர்.விஜயா, அமீர், ஆர்.கே.செல்வமணி, உதயகுமார், கேயார், வைரமுத்து, சிவகுமார், கலைப்புலி எஸ்.தாணு, அமைச்சர்கள் விஜய பாஸ்கர், கடம்பூர் ராஜு உள்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள்.

விழாவில் கலந்து கொண்டு ரஜினி பேசியதாவது: கலைஞானத்துக்கு பாரதிராஜா விழா எடுத்து உள்ளார். என்னை தலைவரே என்று தான் பாரதிராஜா எப்போதும் அழைப்பார். அது எனது ரசிகர்கள் அழைப்பது மாதிரி அல்ல, நட்பால் அழைப்பது. அவருக்கும், எனக்கும் ஆழமான நட்பு உண்டு. கருத்து வேறுபாடும் இருந்தது. எல்லோராலும் ஒரே மாதிரி யோசிக்க முடியாது. கருத்து உரிமை எல்லோருக்கும் இருக்கிறது. அதை தாண்டி எங்களுக்குள் நட்பு உள்ளது. பணம், புகழ் சம்பாதிக்கலாம். பழைய நண்பர்களை சம்பாதிக்க முடியாது.

என்னை கதாநாயகனாக்கி கலைஞானம் படம் தயாரித்தார். எனக்கு ஹீரோவாகும் எண்ணம் இல்லை. சின்ன சின்ன வில்லன், வேடம் ஒரு சொந்த வீடு, ஒரு ஸ்கூட்டர் போதும் வாழ்க்கையில் ஜாலியாக இருக்கலாம் என்ற எண்ணமே இருந்தது. அதனால் வில்லனாக நடித்துக்கொண்டு இருந்தேன். ஆனாலும் பைரவி என்ற படத்தலைப்புக்காகவே அந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்புக்கொண்டேன். காரணம் நான் பார்த்த முதல் படம் பாதாள பைரவி. அபூர்வ ராகங்கள் படத்தில் நான் பேசிய முதல் வசனம் பைரவி வீடு இதுதானே.

சினிமா கதாசிரியர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். நாடக காலத்தில் புராணங்கள் நாடகங்களாக போடப்பட்டதால் கதாசிரியர்களுக்கு மரியாதை இல்லை. சினிமா வந்த பிறகு புராண படங்களும், சரித்திர படங்களும் வந்ததால் கதாசிரியர்களுக்கு மரியாதை இல்லை. வசனகர்த்தாக்களுக்குதான் மரியாதை இருந்தது. சமூக கதைகளை படமாக்கிய பிறகும் அந்த வழக்கமே தொடர்ந்து விட்டது.

சினிமா படங்களில் டைரக்டர், தயாரிப்பாளருக்கு அடுத்தபடியாக கதாசிரியர் பெயரை இடம் பெற வைக்க வேண்டும். அதாவது டைட்டில் கார்டின் இறுதியில் வருகிற வகையில் அவர்கள் பெயரை குறிப்பிட வேண்டும். மலைக்கள்ளன், சந்திரலேகா, நான் நடித்த பாட்ஷா உள்ளிட்ட பெரிய படங்களின் கதாசிரியர்கள் யார் என்றே தெரியாது. அந்த நிலைமைகள் மாற வேண்டும்.

கலைஞானம் வாடகை வீட்டில் குடியிருப்பதாக சொன்னார்கள். சத்தியமாக எனக்குத் தெரியாது. அவருக்கு அரசு சார்பில் வீடு வழங்க ஆவண செய்வதாக அமைச்சர் இங்கே பேசினார். நான் அந்த வாய்ப்பை அரசுக்கு கொடுக்க மாட்டேன். கடைசி மூச்சு வரை என் வீட்டில் தான் அவர் வாழ வேண்டும். கலைஞானம் வசிப்பதற்குரிய வீட்டை உடனடியாக பாருங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
கருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய
காஷ்மீர் விவகாரத்தில் ராஜதந்திரம் : ரஜினி பாராட்டுகாஷ்மீர் விவகாரத்தில் ராஜதந்திரம் : ... சுந்தர்.சி இயக்கதில் விஷாலின் ஆக்ஷன் சுந்தர்.சி இயக்கதில் விஷாலின் ஆக்ஷன்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (11)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
16 ஆக, 2019 - 18:42 Report Abuse
Vasudevan Srinivasan சூப்பர் ஸ்டார் அவர்களை உதவிக்கு அணுகும் மனநிலை திரு. கலைஞானம் அவர்களுக்கு இருந்திருக்காது ஆனால் யாராவது இந்த நிலையை முன்னமே சொல்லியிருந்தால் நிச்சயம் சூப்பர் ஸ்டார் ரஜினி காதோடு காத்து வைத்தமாதிரி வீடு ஒன்றை பரிசளித்திருப்பார்..
Rate this:
பிஸ்கோத்து பையன் நதி நீர் இணைக்க ஒரு கோடி தரேன்னு சொன்னதே இன்னும் வரல .... வீட்டையாவது வாங்கி பத்திர காப்பியை போடுங்க .. அப்ப தான் நம்புவோம் ...
Rate this:
Ramesh M - COIMBATORE,இந்தியா
18 ஆக, 2019 - 16:57Report Abuse
Ramesh Mமிட்டாய் கொடுத்து ஏமாத்தறவங்கள nampra பிஸ்கோத்து பையன். விடுங்க வளரும் போது தான தெரியும். நதிநீர் இணைப்பு கமிட்டியின் இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்க டோனர் லிஸ்டில்....
Rate this:
orange mittai - Melbourne ,ஆஸ்திரேலியா
15 ஆக, 2019 - 23:05 Report Abuse
orange mittai முதல்ல வாடகை ஒழுங்கா கொடுங்க தல.
Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
16 ஆக, 2019 - 10:07Report Abuse
Mirthika Sathiamoorthiவாடகையை ஒழுங்கா கொடுக்கலைன்னா என்ன ஆகும்? சட்ட நடவடிக்கை பாயும் இடத்தை காலி செய்ய நேரிடும்....வாடகையே கொடுக்கமா அதேசமயம் வழக்கையும் சந்திச்சு இடத்தை காலிசெய்யாம இருக்கும் தில்லு தல உனக்கு மட்டும்தான்....வாடகையை வசூல் பண்ண துப்பில்லாத குழந்தை மூஞ்சிகளெல்லாம் எதுக்கு வாடகைக்கு விடுத்துங்க? ....
Rate this:
JMK - Madurai,இந்தியா
16 ஆக, 2019 - 11:16Report Abuse
JMKஉன் வீடு வாடகை நீதான் தரணும் ?...
Rate this:
JMK - Madurai,இந்தியா
16 ஆக, 2019 - 11:17Report Abuse
JMKதல (அஜித் ) எப்போது வாடகை தரலைனு உன்கிட்ட சொன்னாரா ?...
Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
17 ஆக, 2019 - 13:20Report Abuse
Mirthika Sathiamoorthiவாடகையெல்லாம் தரமுடியாது உன்னால முடிஞ்சதை பாத்துக்கோ...மவனே யாருகிட்ட வாடகை கேக்குற ...ஜெய் ஸ்ரீராம்....தமிழன்டா...
Rate this:
Ramesh M - COIMBATORE,இந்தியா
18 ஆக, 2019 - 16:59Report Abuse
Ramesh Mஎவ்வளவு மாதம் குடியிருக்கிறார். எவ்வளவு மாதம் வாடகை தர வேண்டும்....
Rate this:
Ramesh M - COIMBATORE,இந்தியா
18 ஆக, 2019 - 17:00Report Abuse
Ramesh Mஅட்வான்ஸ் எவ்வளவு கொடுத்தார் என்ற விவரமும். அந்த அட்வான்ஸில் ஏன் கழிக்கவில்லை என்ற விவரமும் வேண்டும்....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  Tamil New Film Asuran
  • அசுரன்
  • நடிகர் : தனுஷ்
  • நடிகை : மஞ்சு வாரியர்
  • இயக்குனர் :வெற்றிமாறன்
  Tamil New Film Zombie
  • ஜாம்பி
  • நடிகர் : யோகி பாபு
  • நடிகை : யாஷிகா ஆனந்த்
  • இயக்குனர் :புவன் நல்லான்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in