வந்தது 15, வசூலானது 1 : நவம்பர் மாத படங்கள் ஓர் பார்வை | மற்றுமொரு விவசாய படம் | நண்பர்கள் முத்தம் கொடுப்பார்களா?: ஜெயஸ்ரீ பேட்டி | ரொமான்டிக் ரவுடியாக யோகிபாபு | விஷாலுக்கு வில்லன் ஆகும் ஆர்யா | கன்னியாகுமரி கோவிலில் நயன்தாரா: மூக்குத்தி அம்மனுக்காக விரதம் தொடங்கினார் | ரூ.20 லட்சம் இழப்பீடு கோரி மகாநதி ஷோபனா வழக்கு | 'நான்அப்படிப்பட்டவள் அல்ல! | நடிகையின் சமூக விழிப்புணர்வு! | சிறப்பான கதாபாத்திரம்! |
சென்னை: ஈரானில் உள்ள ஒரு உடற்பயிற்சிக் கூடத்தில் போக்கிரி படத்தில் இடம்பெற்ற மாம்பழமாம் மாம்பழம் பாடலுக்கு மக்கள் நடனமாடும் வீடியோ வைரலாகி வருகிறது.
பிரபுதேவா இயக்கத்தில் விஜய், அசின், வடிவேலு பிரகாஷ்ராஜ், நாசர், நெபோலியன், ஸ்ரீமன் உள்ளிட்டோர் நடித்த படம் போக்கிரி. கடந்த 2007ம் ஆண்டு வெளிவந்த இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
இந்த படத்திற்கு இசையமைத்தவர் மணி ஷர்மா. இவரது இசையில் படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. குறிப்பாக மாம்பழமாம் மாம்பழம் பாட்டு பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது.
இந்நிலையில் இந்த பாடல் நாடுவிட்டு நாடு போய் ஹிட்டாகியுள்ளது. ஈரான் நாட்டில் உள்ள ஒரு உடற்பயிற்சி கூடத்தில் தினமும் இந்த பாடலுக்கு நடனமாடுகின்றனர். உடற்பயிற்சியை தொடங்கும் முன்னர் இந்த பாடலுக்கு நடனமாடி, தங்களை உற்சாகப்படுத்தி கொள்கின்றனர்.
தமிழ் பட பாடல் ஒன்று ஈரான் நாடு வரை பிரபலமாகியிருப்பதை கண்டு ஆச்சரியப்பட்டவர்கள் இந்த வீடியோவை தங்களுடைய சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். இதனால் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.