Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

குடிபோதையில் நடிகைக்கு அடி-உதை; கைதான நடிகர்

13 ஆக, 2019 - 16:43 IST
எழுத்தின் அளவு:
An-Actor-arrested-for-beat-his-wife

குடிபோதையில் தன்னுடைய இரண்டாவது கணவர், தன்னையும் தன்னுடைய மகளையும் அடித்து துன்புறுத்துவதாக பிரபல நடிகை ஒருவர் கொடுத்த புகாரை அடுத்து கணவரை போலீஸார் கைது செய்திருக்கின்றனர்.

பிரபல இந்தி நடிகை ஸ்வேதா திவாரி. இவர், நாகினி உள்ளிட்ட தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து பிரபலமானவர். சக நடிகரான ராஜா சவுத்ரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பாலக் என்ற மகள் உள்ளார். ஒன்பது ஆண்டுகள் இவர்களுடைய திருமண வாழ்க்கை சிக்கலில்லாமல் சென்றது. ஒரு கட்டத்தில் இருவருக்கும் மன வருத்தம் ஏற்பட்டு, சில ஆண்டுகளுக்கு முன் இருவரும் விவகாரத்து செய்து கொண்டு பிரிந்து விட்டனர்.

இதையடுத்து, கடந்த 2013ல், நடிகை ஸ்வேதா, இன்னொரு நடிகர் அபினவ் கோலியை காதலித்து மறுமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

இந்நிலையில், மும்பை காந்திவிலி காவல் நிலையத்தில், நடிகர் அபினவ் கோலி மீது ஸ்வேதா புகார் ஒன்றை கொடுத்திருக்கிறார். அந்தப் புகாரில், என்னுடைய இரண்டாவது கணவர் நடிகர் அபினவ் கோலி, தினமும் மது போதையில் வீட்டுக்கு வந்து என்னையும், என்னுடைய மகளையும் அடிக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் புகாரில் கூறியிருக்கிறார்.

அந்தப் புகாரை விசாரித்த போலீசார், அபினவ் கோலியை கைது செய்திருக்கின்றனர்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
சன்னி லியோன் தொடர்ந்து முதலிடம்சன்னி லியோன் தொடர்ந்து முதலிடம் அக்க்ஷய் குமாரை கீழே தள்ளிய சோனாக்சி சின்ஹா அக்க்ஷய் குமாரை கீழே தள்ளிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
15 ஆக, 2019 - 04:34 Report Abuse
skv srinivasankrishnaveni பல பேரின் மறுமண வாழ்க்கை கேவலமாவே தான் இருக்கு என்ன செய்வது சினிஉலகிலே குடிக்காதவாலே இல்லீங்க போதை ஏறினாள் எல்லாம் மறந்துபோயிருமோ கஸ்மாலம்
Rate this:
sri - trichy,இந்தியா
14 ஆக, 2019 - 16:15 Report Abuse
sri LAX சரியாய் சொன்ன
Rate this:
LAX - Trichy,இந்தியா
13 ஆக, 2019 - 18:24 Report Abuse
LAX காரியம் ஆகற வரை 'பழச பேசமாட்டேன்.. கண்ணுக்குள்ள வெச்சு பாத்துக்கறேன்' னுவானுங்க.. அப்புறம் கண்ணுக்குள்ள விரலை விட்டு கொதறல் தான்.. பெண்களின் நிலை கதறல் தான்.. உஷார் பெண்களே..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in