Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தேசிய விருதுகள்: விஸ்வரூபமெடுக்கும் சர்ச்சைகள்

13 ஆக, 2019 - 15:28 IST
எழுத்தின் அளவு:
66th-National-film-Awards-makes-controversy

2018ம் ஆண்டிற்கான 66வது தேசிய திரைப்பட விருதுகள் சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டன. அவற்றில் வழக்கமாக வழங்கப்படும் தமிழில் சிறந்த பிராந்திய மொழித் திரைப்படத்திற்கான விருது 'பாரம்' என்ற படத்திற்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது.

வேறு எந்த ஒரு பிரிவிலும் தமிழ் சினிமாவிற்கு ஒரு விருதுகள் கூட வழங்கப்படவில்லை. இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே மாதமே இந்த விருதுகளைப் பற்றி அறிவிப்பதாக இருந்தது. ஆனால், தேர்தல் அறிவிக்கப்பட்டதால் தள்ளி அறிவித்துளளார்கள்.

தமிழிலிருந்து எந்தெந்த படங்கள் தேர்வுக்குச் சென்றன என்பது குறித்து திரையுலகத்தில் விசாரித்த போது உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை. இருப்பினும் 'பரியேறும் பெருமாள், 96, வட சென்னை, ராட்சசன், பேரன்பு, 2.0' உள்ளிட்ட படங்கள் தேர்வுக்கு சென்றதாகத் தெரிவிக்கிறார்கள்.

தமிழ் சினிமாவிற்கான பிரதிநிதியாக ஒளிப்பதிவாளர் கார்த்திக் ராஜா சென்றுள்ளார். அவர் தமிழ்ப் படங்களுக்கான தேசிய விருதுகளை நடுவர் குழுவுடன் விவாதித்து பெற்றுத் தந்திருக்க வேண்டும் என்று திரையுலகில் குரல்கள் எழுந்துள்ளன.

பொதுவாக அந்த பிரதிநிதி இதற்கு முன்பு தேசிய விருது பெற்ற ஒருவராகத்தான் இருப்பாராம். ஆனால், இந்த முறை அப்படி தேசிய விருதுகளைப் பெற்ற யாரும் டில்லி சென்று 25 நாட்கள் வரை அங்கு தங்கத் தயாராக இல்லையாம். அதனால் தான், தமிழுக்கு இந்த முறை விருதுகளே இல்லாத சூழல் உருவாகியுள்ளது என்கிறார்கள்.

2.0 படத்திற்கு எப்படியும் ஸ்பெஷல் எபெக்ட்ஸ், இசை, ஒளிப்பதிவு உள்ளிட்ட ஓரிரு விருதுகள் கிடைத்திருக்கும் என்றே பலரும் கருதுகிறார்கள். 'பேரன்பு' படத்தில் நடித்ததற்கு மம்முட்டி, சாதனா ஆகியோருக்கும், 'வட சென்னை, பரியேறும் பெருமாள், 96, ராட்சசன்' ஆகிய படங்களுக்கு வேறு சில பிரிவுகளில் விருதுகள் கிடைத்திருக்கலாம் என்றே பலரது எண்ணமாக உள்ளது.

எங்கே தவறு நடந்துள்ளது என்பது குறித்து உடனடியாக தமிழ்த் திரையுலகத்தின் முன்னோடிகள் ஒன்றாக அமர்ந்து, இந்தக் குறையை வரும் ஆண்டில் நடக்க முடியாத அளவிற்குத் தடுக்க வேண்டும் என்பதே திரையுலகத்தில் உள்ள பலரது கோரிக்கையாக உள்ளது.

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
அஜித்தை பாராட்டிய ரஜினிஅஜித்தை பாராட்டிய ரஜினி பிக்பாஸ் போட்டியாளர்களை வாயடைக்க வைத்த வனிதா! பிக்பாஸ் போட்டியாளர்களை வாயடைக்க ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

Mass -  ( Posted via: Dinamalar Android App )
14 ஆக, 2019 - 08:54 Report Abuse
Mass நீங்கள் படம் எடுக்கும் லச்சனத்துக்கு விருது ஒரு கேடா
Rate this:
garasu - India,இந்தியா
14 ஆக, 2019 - 04:11 Report Abuse
garasu இங்கே இருக்கிறவர்களுக்கு தி மு கவுக்கு செம்பு தூக்கவே நேரம் சரியாய் இருக்கு அப்புறம் எப்படி பேசுவார்கள்.
Rate this:
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
13 ஆக, 2019 - 21:54 Report Abuse
Allah Daniel நாடெல்லாம் மழை, வெள்ளம்..இவனுங்க எதுக்கு போராடுறாங்க பாரு..
Rate this:
BoochiMarunthu - Paradise papers,பனாமா
13 ஆக, 2019 - 21:32 Report Abuse
BoochiMarunthu யார் இந்த கார்த்திக் ராஜா ? யார் இவரை தேர்ந்தெடுத்தது ?
Rate this:
kumzi - trichy,இந்தியா
13 ஆக, 2019 - 21:08 Report Abuse
kumzi தமிழ்ராக்கர்ஸ்க்கு தேசிய விருது கொடுக்கணும்
Rate this:
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
14 ஆக, 2019 - 09:51Report Abuse
கல்யாணராமன் சு.உண்மைதான் ......... எல்லா படங்களையும் (தண்டமான படங்கள் உட்பட) உலகளவில் பிரபலப்படுத்தியது அவர்கள்தானே? .........
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in