Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நம்ம வீட்டுப் பிள்ளை - 'கடைக்குட்டி சிங்கம்' இரண்டாம் பாகம் ?

13 ஆக, 2019 - 12:22 IST
எழுத்தின் அளவு:
Did-Namma-Veettu-Pillai-is-sequel-of-Kadaikutty-Singam

பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் நடிக்கும் 'நம்ம வீட்டுப் பிள்ளை' படத்தின் முதல் இரண்டு போஸ்டர்கள் நேற்று வெளியிடப்பட்டன.

முதலில் இந்தப் படத்திற்கு 'எங்க வீட்டுப் பிள்ளை' எனப் பெயர் வைக்கலாம் எனத் தகவல் வெளியானது. ஆனால், அப்படத்தின் தயாரிப்பாளர்கள் அப் பெயரை வழங்க மறுத்துவிட்டதால், அதே பாணியில் 'நம்ம வீட்டுப் பிள்ளை' எனப் பெயர் வைத்திருக்கிறார்கள்.

இப்படத்தின் இரண்டாவது போஸ்டரைப் பார்த்த பலரும் இது 'கடைக்குட்டி சிங்கம்' படத்தின் இரண்டாவது பாகமாக இருக்குமோ என சந்தேகப்படுகிறார்கள். அந்தப் படத்தைப் போலவே இந்தப் படமும் ஒரு கூட்டுக் குடும்பத்தின் கதையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வயதான பாரதிராஜா, சுப்பு பஞ்சு, ஆடுகளம் நரேன், வேலராமமூர்த்தி, சண்முகராஜன் ஆகியோருடன், சமுத்திரக்கனி, நட்டி, யோகி பாபு, ஆர்கே சுரேஷ் என அடுத்த வயதுடைய நடிகர்களும் படத்தில் இருக்கிறார்கள். அர்ச்சனா, ஷீலா, மைனா, ரமா ஆகிய நடிகைகளும் படத்தில் நடிக்கிறார்கள்.

படத்திற்கான மீம்ஸ்களும் நேற்றிலிருந்தே பரபரப்பை ஆரம்பித்துவிட்டன. ஒரு சிட்டி படம், ஒரு வில்லேஜ் படம் என மாறி மாறி நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். வேட்டி கட்டினால் சூரி, பேன்ட் போட்டால் சதீஷ் என ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மாநாடு - கானலாகும் கல்யாணியின் ஆசைமாநாடு - கானலாகும் கல்யாணியின் ஆசை புதிய படங்களை தள்ளி வைத்த சமந்தா புதிய படங்களை தள்ளி வைத்த சமந்தா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in