Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியதாக ரகுல் தகவல்

12 ஆக, 2019 - 17:47 IST
எழுத்தின் அளவு:
Indian-2-shoot-begins-says-Rakul-preet-singh

‛இந்தியன்' படம் ரிலீஸாகி இருபத்தி மூன்று ஆண்டுகள் ஆகும் நிலையில், இந்தியன் 2ஐ அதே நடிகர் கமலும், இயக்குநர் ஷங்கரும் இணைந்து உருவாக்குகின்றனர். பிரம்மாண்ட பொருட் செலவில் தயாராகும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு, கடந்த ஜனவரில், பொள்ளாச்சியில் பிரம்மாண்ட செட் அமைத்து துவங்கியது. முப்பது நாட்களுக்கு மேல் நடந்த படப்பிடிப்பு, திடுமென நிறுத்தப்பட்டது. நடிகர் கமல், இயக்குநர் ஷங்கர், தயாரிப்பு நிறுவனமான லைகா இடையே நடந்த முக்கோண சண்டையால் படம் பாதியில் நிறுத்தப்பட்டது.

பின், தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளுக்குப் பின், மீண்டும் படபிடிப்பை துவங்கி இருக்கின்றனர். இம்மாதம் படபிடிப்பு துவங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், படபிடிப்பு துவங்கி இருக்கிறது

நடிகர் கமலோடு, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர், சித்தார்த், வித்யூத் ஜம்வால், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

இரண்டாம் கட்ட படபிடிப்பு நடைபெறுவதை, படத்தில் நடிக்கும் ரகுல் ப்ரீத் சிங், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தகவல் வெளியிட்டு, தெரிவித்திருக்கிறார்

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கமல் கையால் விருது பெற்றது பெருமை: கதிர்கமல் கையால் விருது பெற்றது பெருமை: ... செப்., 5 - ஆசிரியர் தினத்தில் அடுத்த சாட்டை செப்., 5 - ஆசிரியர் தினத்தில் அடுத்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in