Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

டான்ஸ் கிளாஸ் நடத்தும் லட்சுமி மேனன்

12 ஆக, 2019 - 11:26 IST
எழுத்தின் அளவு:
Lakshmi-menon-starts-dance-class

அடிப்படையில் நடன கலைஞரான லட்சுமி மேனன், மலையாள படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்தார். தமிழில் கும்கி படத்தின் மூலம் அறிமுகமாகி புகழ் பெற்றார். சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, படங்களில் நடித்து ஜூனியர் ரேவதி என்று புகழப்பட்டார். ஜிகிர்தண்டா படம் இன்னும் ஒரு படி அவரை உயர்த்தியது. வேதாளம் படத்தில் அஜித் தங்கையாக நடித்து அடுத்த கட்டத்துக்கு உயர்ந்தார்.

அதன் பிறகு என்னாச்சு என்று தெரியவில்லை. அவரது கேரியர் மளமளவென இறங்கியது. படிக்க போகிறேன் என்று அறிவித்தார். உடல் எடை அதிகரித்து அதிர்ச்சி கொடுத்தார். தற்போது அவர் நடித்து முடித்துள்ள ஒரே படம், ‛எங் மங் ஜங்'. அதுவும் இன்னும் வெளிவரவில்லை. வேறு புதிய படம் எதிலும் நடிக்கவில்லை.

இந்த நிலையில் லட்சுமி மேனன் நடனத்தில் கவனம் செலுத்த தொடங்விட்டார். தனது வீட்டிலேயே ஆர்வமுள்ள குழந்தைகளுக்கு நடனம் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அவரிடம் பயிற்சி பெற்ற குழந்தைகளின் அரங்கேற்றம் விரைவில் நடக்க இருக்கிறது. விரைவில் பெரிய அளவில் நடனபள்ளி தொடங்கும் திட்டத்தில் இருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
சரவணன் பற்றி எதுவும் பேசாத கமல்ஹாசன்சரவணன் பற்றி எதுவும் பேசாத கமல்ஹாசன் ஆமீர்கானுடன் நடிக்கும் விஜய் சேதுபதி? ஆமீர்கானுடன் நடிக்கும் விஜய் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

shoba -  ( Posted via: Dinamalar Android App )
12 ஆக, 2019 - 15:18 Report Abuse
shoba better to colloborate with aishwarya rajinikanth....can become famous overnight like michejackson
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in