ஒரே நாளில் மோதும் செல்வராகவன் - தனுஷ் | ரஜினியின் ஜெயிலர் படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர் | குஷ்புவின் காலில் ஏற்பட்ட திடீர் காயம் | சர்வதேச தரத்தில் தங்கலான் பாடல்கள் : ஜி.வி.பிரகாஷ் | டுவிட்டர் டிரெண்டிங்கில் “#JusticeforVigneshShivan” | 100 கோடி வசூலில் 'ஹாட்ரிக்' அடித்த 'பதான்' | 'அஜித் 62' குழப்பத்திற்கு என்ன காரணம்? | அறிவிப்பே வரவில்லை, அதற்குள் விற்கப்பட்ட 'விஜய் 67' | ஹீரோயின் ஆனார் ஜாக்குலின் | ஷசாம் - பியூரி ஆப் காட் : தமிழில் அடுத்து வெளிவரும் சூப்பர் ஹீரோ படம் |
பரமக்குடியை சேர்ந்த வக்கில் சீனிவாசன், ராஜலட்சுமி தம்பதிகளின் கடைசி மகன் கமல்ஹாசன். பள்ளி விடுமுறை காலத்தில் சென்னையில் உள்ள அத்தை, மாமா வீட்டிற்கு வருவார். அப்படி ஒரு முறை வரும்போது குடும்ப மருத்துவர் ஒருவர், ஏவிஎம் ஸ்டூடியோவுக்கு ஷூட்டிங் பார்க்க கமலை அழைத்துச் சென்றார்.
படப்பிடிப்பு தளத்தில் துறுதுறுவென விளையாடிக் கொண்டிருந்த கமல்ஹாசனை பார்த்த ஏவிஎம் செட்டியாருக்கு மிகவும் பிடித்து விட்டது. குடும்ப மருத்துவரை அழைத்து பையன் யார் என்று விசாரித்தார். "நம்ம செட்டிநாட்டு பையன் தான். வக்கில் சீனிவாசனோட கடைசி புள்ளை" என்று கூறியிருக்கிறார். அப்போது அவர் களத்தூர் கண்ணம்மா படத்திற்கு ஒரு குழந்தை நட்சத்திரத்தை தேடிக் கொண்டிருந்தார். அதற்கு கமலை தேர்வு செய்தார்.
"பையன் சினிமாவில் நடிப்பானான்னு அவுங்க வீட்டுல கேட்டுச் சொல்லும்" என்றார் செட்டியார். மறுநாள் மருத்துவர் வந்து "வக்கில் ஓகே சொல்லிட்டார். ஆனா படத்தை அவன் லீவுக்குள்ள முடிச்சிடனும், படிப்பு கெட்டுவிடக்கூடாது என வக்கில் சொல்லிட்டார்" என்றார்.
இப்படித்தான் கமல் நட்சத்திரம் ஆனார். முதல் படத்திலேயே சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது பெற்றார். அதன் பின் பசி தீரும், பாத காணிக்கை, வாணம்பாடி, ஆனந்த ஜோதி உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அப்போதைய முன்னணி நடிகர்களான எம்.ஜி.ஆர், சிவாஜி மற்றும் ஜெமினி கணேஷன் உடன் கமல் நடித்துள்ளார்.
1973-ம் ஆண்டு கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான அரங்கேற்றம் படத்தில் முழுமையான நடிகர் ஆனார். அதன்பிறகு அவர் கடந்து வந்த பாதை அனைவரும் அறிந்ததே. இன்று(ஆக.,12) களத்தூர் கண்ணம்மாவுக்கும், பரமக்குடி கமல்ஹாசனின் சினிமா அனுபவத்துக்கும் 60 வயது நிறைவடைகிறது.