Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கீர்த்தி சுரேஷிற்கு தேசிய விருது - சிறந்த தமிழ்படம் ‛பாரம்

09 ஆக, 2019 - 16:02 IST
எழுத்தின் அளவு:
National-Award-to-Keerthi-Suresh

புதுடில்லி : சினிமா துறைக்கு இந்திய அரசால் வழங்கப்படும் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. லோக்சபா தேர்தல் காரணமாக மூன்று மாதம் தள்ளிப்போன 66வது தேசிய விருதுகள் இன்று(ஆக.,9) அறிவிக்கப்பட்டன. சிறந்த நடிகையாக கீர்த்தி சுரேஷ் தேர்வு செய்யப்பட்டார். சிறந்த தமிழ் படமாக பாரம் தேர்வானது.

2018ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த நடிகையாக கீர்த்தி சுரேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சாவித்ரி வாழ்க்கையை மையமாக வைத்து தெலுங்கில் வெளிவந்த ‛மகாநடி படத்தில் நடித்தமைக்காக அவருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் இப்படம் ‛நடிகையர் திலகம் என்ற பெயரில் மொழிமாற்றமாகி வெளியானது.

சிறந்த தமிழ் படம்
சிறந்த தமிழ் படமாக பாரம் தேர்வாகி உள்ளது. பிரியா கிருஷ்ணசுவாமி இயக்கி உள்ள இப்படம் இன்னும் திரைக்கு வரவில்லை.

இருவர் சிறந்த நடிகர்கள்
சிறந்த நடிகர்களாக இருவர் தேர்வாகி உள்ளனர். ஹிந்தியில் வெளிவந்த ‛உரி படத்தில் நடித்த விக்கி கவுசல் மற்றும் ‛அந்தாதூன் படத்தில் நடித்த ஆயுஷ்மான் குரானா ஆகியோருக்கு நடிகர்களுக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்மாவத் - 3 விருதுகள்
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே நடிப்பில் கடந்தாண்டு பல்வேறு பிரச்னைகளை கடந்து வெளியான படம் பத்மாவத். இப்படத்திற்கு மூன்று தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. சிறந்த இசையமைப்பாளர் - சஞ்சய் லீலா பன்சாலி, சிறந்த நடனம் - கிருதி மகேஷ் மற்றும் ஜோதி தோமன் (கூமர்... பாடல்) மற்றும் சிறந்த பின்னணி பாடகர் - அர்ஜித் சிங் ஆகிய பிரிவுகளில் விருது பெற்றுள்ளது.

கேஜிஎப் படத்திற்கு 2 விருதுகள்
யாஸ் நடிப்பில் கன்னடத்தில் வெளியான படம் கேஜிஎப். தென்னிந்திய மொழிகளிலும் வெளிவந்து வெற்றி பெற்ற இப்படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. சிறந்த சண்டை மற்றும் ஸ்பெஷல் எபெக்ட்ஸ் பிரிவுகளில் விருது பெற்றுள்ளன.

தேசிய விருதுகள் விபரம்...

சிறந்த படம்: ஹேலாரா(குஜராத்)

சிறந்த நடிகர்கள்: ஆயுஸ்மான் குரானா(அந்தாதூன்), விக்கி கவுசல்(உரி)

சிறந்த நடிகை: கீர்த்தி சுரேஷ் (மகாநடி, தெலுங்கு)

சிறந்த இயக்குநர்: ஆதித்யா தார் (படம்: உரி)

சிறந்த அறிமுக இயக்குநர்: சுதாகர் ரெட்டி

சிறந்த துணை நடிகர்: சாவந்த் கிர்கிரி (படம்: சம்பக் - மராத்தி)

சிறந்த துணை நடிகை: சுரேகா சிக்ரி (படம்: பதாய் ஹோ - ஹிந்தி)

சிறந்த இசையமைப்பாளர்: சஞ்சய் லீலா பன்சாலி(பத்மாவத்)

சிறந்த பின்னணி பாடகர் - அர்ஜித் சிங்(பத்மாவத்)

சிறந்த பின்னணி பாடகி: பிந்து மாலினி (நதிசராமி - கன்னடம்)

சிறந்த பின்னணி இசை: சாஸ்வத் சஜ்தேவ்(உரி)

சிறந்த பொழுதுப்போக்கு படம்: பதாய் ஹோ

சிறந்த குழந்தை நட்சத்திரம்: பிவி ரோகித்(கன்னடம்), சமீப் சிங்(பஞ்சாபி), தல்ஹா அர்ஷத் ரெஷி(உருது), ஸ்ரீனிவாஸ் போகலே(மராத்தி)

சிறந்த படத்தொகுப்பு: நாகேந்திர கே.உஜ்ஜைனி (நதிசராமி - கன்னடம்)

சிறந்த ஆடை அலங்காரம்: இந்திராக்ஷி, கவுரங் ஷா மற்றும் அர்ச்சனா ராவ் (மகாநடி - தெலுங்கு)

சிறந்த மேக்கப்: ரஞ்சித் (அவே - தெலுங்கு)

சிறந்த பாடலாசிரியர்: மஞ்சுநாதா (பாடல்: மாயாவி மனாவே... - படம் நதிசராமி - கன்னடம்)

சிறந்த திரைக்கதை: ராகுல் ரவிந்திரன் (தெலுங்கு)

சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்ஸ் : அவே(தெலுங்கு) - கேஜிஎப்(கன்னடம்)

சிறந்த ஒளிப்பதிவு: எம்ஜே.ராதா கிருஷ்ணன் (ஒலு - மலையாளம்)

சிறந்த தமிழ் படம்: பாரம்

சிறந்த தெலுங்கு படம்: மகாநடி

சிறந்த கன்னடம் படம்: நதிசராமி

சிறந்த மலையாள படம்: சூடானி பிரம் நைஜீரியா

சிறந்த ஹிந்தி படம்: அந்தாதூன்


பெற்றோருக்கு பெருமை - கீர்த்தி சுரேஷ்


கீர்த்தி சுரேஷ் அளித்த பேட்டி : தேசிய விருது அறிவித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. குடும்பத்துடன் கேரளாவில் இருக்கிறேன். 20 ஆண்டுகளுக்கு பிறகு தெலுங்கு சினிமாவில் சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்ததாக சொன்னார்கள். இந்த நேரத்தில் தயாரிப்பாளர், இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினருக்கு நன்றி. என்னால் சாவித்ரி கேரக்டரில் நடிக்க முடியுமா என பயந்தேன். சவாலாக இருந்தது, ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி.

தேசிய விருது மூலம் என் பெற்றோருக்கு பெருமை தேடி தந்துள்ளேன் என நம்புகிறேன். வரும் காலங்களில் நல்ல கதையுள்ள படங்களில் நடிப்பேன். அடுத்தப்படியாக மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்திலும், கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் புதியவர் ஈஸ்வர் இயக்கும் ஒரு படத்திலும் நடிக்கிறேன். தேசிய விருது கிடைக்க காரணமாக இருந்த அத்தனை பேருக்கும் இந்தநேரத்தில் நன்றி.

இவ்வாறு கீர்த்தி சுரேஷ் தெரிவித்தார்.


Advertisement
கருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய
2021ல் தான் 'இந்தியன் 2' ரிலீஸ்?2021ல் தான் 'இந்தியன் 2' ரிலீஸ்? ரஜினிக்கு நன்றி தெரிவித்த விஜயலட்சுமி ரஜினிக்கு நன்றி தெரிவித்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (11)

gjp -  ( Posted via: Dinamalar Android App )
13 ஆக, 2019 - 19:13 Report Abuse
gjp padam paatha annike ungaluku thaan national award for best actress 2019 kidaikum nu expect pannen..you deserve it dear keerthi suresh..proud of you and very happy for you.
Rate this:
Young Prince - Bangalore,இந்தியா
10 ஆக, 2019 - 08:24 Report Abuse
Young Prince கீர்த்தி சுரேஷுக்கு கிடைத்த தேசிய விருத்தால் தேசிய விருதுக்கே பெருமை.
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
10 ஆக, 2019 - 07:57 Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் கீர்த்தியின் கீர்த்தி அந்த அப்படத்தில் தெரிந்தது.
Rate this:
prasath -  ( Posted via: Dinamalar Android App )
10 ஆக, 2019 - 06:14 Report Abuse
prasath என்னடா தேசிய விருதுக்கு வந்த சோதனை
Rate this:
spr - chennai,இந்தியா
10 ஆக, 2019 - 05:31 Report Abuse
spr திரையில் வந்து சில நாட்களுக்கே ஓடிய படங்களுக்கு கூட இல்லாமல் திரைக்கே வராத ஒரு படத்திற்கு விருதா? பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களையே மக்கள் தேர்ந்தெடுக்கும் பொழுது இப்படி மக்கள் இன்னமும் பார்க்காத படத்திற்கு, யாரோ ஒருவர் கொடுக்கும் விருது முறை சரியா? இந்த விருதுகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டாமா கொடுக்கப்படும் விருது உண்மையிலேயே சிறப்பு கருதி கொடுக்கப்பட்ட விருதா இல்லை "வாங்கப்பட்ட" ஒன்றா அப்படி என்ன அந்தப் படத்தில் சிறப்பு இந்த நிலை தொடர்ந்தால் அடுத்து படம் எடுக்கப்படும் முன்னமேயே விருது வழங்கப்படுமா
Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  Tamil New Film Yang Mang Chang
  • எங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in