Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'விஸ்வாசம்' அளவுக்கு 'நேர்கொண்ட பார்வை'யும் ரிலீஸ்...

05 ஆக, 2019 - 12:14 IST
எழுத்தின் அளவு:
Nerkonda-Paarvai-releasing-like-Viswasam

வினோத் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் அஜித், வித்யாபாலன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'நேர்கொண்ட பார்வை' படம் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி வெளியாக உள்ளது.

கடந்த வாரம் தான் இப்படத்தின் தமிழ்நாடு வினியோக உரிமை வியாபாரம் முடிவுற்றது. அதற்கு முன்பு வரை படத்தைப் பற்றி எதிர்மறையான தகவல்கள், செய்திகள் தான் அதிகம் வந்தன. வினியோகஸ்தர்களிடையே படத்திற்கு அதிக வரவேற்பில்லை, அதனால், 'விஸ்வாசம்' படத்தின் பாதி விலைக்கு படத்தைக் கேட்கிறார்கள் என்றும் சொன்னார்கள்.

'விஸ்வாசம்' படத்தை விட சில பல கோடிகள் குறைவாகத்தான் 'நேர்கொண்ட பார்வை' தமிழ்நாடு உரிமை விற்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். அதே சமயம், படத்தைத் திரையிடும் தியேட்டர்களைப் பொறுத்தவரையில் 'விஸ்வாசம்' படம் எந்த எண்ணிக்கையில் தியேட்டர்களில் திரையிடப்பட்டதோ அதே அளவு எண்ணிக்கையில்தான் 'நேர்கொண்ட பார்வை' படமும் திரையிடப்படுகிறதாம்.

சென்னையை பொறுத்தவரையில் அதன் புறநகர்ப் பகுதிகளையும் சேர்த்து சுமார் 60 தியேட்டர்களில் 'நேர்கொண்ட பார்வை' படம் வெளியாக உள்ளது. முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதிகாலை காட்சிகள் பற்றி இன்று தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
முத்தையா முரளிதரன் பயோபிக், இணை தயாரிப்பில் ராணா ஏன் ?முத்தையா முரளிதரன் பயோபிக், இணை ... இரண்டு படங்கள் : கெட்-அப் மாற்றிய கமல்ஹாசன் இரண்டு படங்கள் : கெட்-அப் மாற்றிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in