Advertisement

சிறப்புச்செய்திகள்

ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ.... மகா (நடி)கை எனும் சாவித்திரி | மம்முட்டியுடன் மலையாளப் படத்தில் நடிக்கும் ரம்யா பாண்டியன் | தனிமைப்படுத்தாமல் படப்பிடிப்பு - கமல்ஹாசனிடம் விளக்கம் கேட்கும் சுகாதாரத் துறை | தண்ணிவண்டியின் கதை என்ன? | மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார் அமீர் | தயாரிப்பு நிர்வாகிகளால் நடிகைகளுக்கு மன அழுத்தம் : சார்மிளா | மோசடி மன்னனுடன் தொடர்பு : விமான நிலையத்தில் ஜாக்குலின் பெர்ணாண்டஸ் தடுத்து நிறுத்தம் | மீண்டும் நடிகர் சங்க தலைவர் ஆகிறார் மோகன்லால் | மலையாளப் பின்னணிப் பாடகர் தோப்பில் ஆண்டோ காலமானார் | ஆர்ஆர்ஆர் - 9ம் தேதிக்காகக் காத்திருக்கும் 900 கோடி படம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினியைக் கிண்டலடிக்கும் கோமாளி டிரைலர்

04 ஆக, 2019 - 12:33 IST
எழுத்தின் அளவு:
komali-trailer-criticize-rajini-political-entry

அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் கோமாளி படத்தின் டிரைலர் நேற்று வெளியானது.

டிரைலரைப் பார்க்கும் போது ஒரு சுவாரசியமான படமாக இருக்கும் என எதிர்பார்ப்பு வருகிறது. 16 வருடங்களாக கோமாவில் இருந்த ஒருவன் கண் விழித்த பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதையாக இருக்கும் என யூகிக்க முடிகிறது. அதை நகைச்சுவையாகவும், ஆக்ஷனுடனும், உணர்வுபூர்வமாகவும் கொடுக்க உள்ளார்கள் எனத் தெரிகிறது.


ஜெயம் ரவி, சம்யுக்தா இடையிலான பள்ளி காதல் காட்சிகள், ஜெயம் ரவி, யோகி பாபு மற்றும் அபார்ட்மென்ட் குழந்தைகளின் காமெடி, கேஎஸ் ரவிக்குமாரின் வில்லத்தனம், ஹிப்ஹாப் தமிழாவின் பாடல்கள் என ஒரு பக்கா கமர்ஷியல் படமாக இந்தப் படம் ரசிகர்களைக் கவர முயற்சிக்கலாம்.


படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் சில குறும்படங்களை மட்டுமே இயக்கிய அனுபவம் உள்ளவராம். யாரிடமும் உதவி இயக்குனராகவும் இருந்த அனுபவமில்லையாம். 23 வயதில் தயாரிப்பாளரிடம் கதையைச் சொல்லி 26 வயதில் படத்தை எடுத்து முடித்திருக்கிறார். அவரைப் பார்த்தால் கல்லூரி மாணவர் போலத்தான் இருக்கிறார்.


கோமாளி டிரைலரில் ஆரம்பம் முதல் கடைசி வரை உள்ள சுவாரசியம் படத்தின் கிளைமாக்ஸ் போல டிரைலரின் கிளைமாக்சிலும் ரஜினிகாந்தின் அரசியல் பேச்சு ஒன்றினால் சரியாக இடம் பெற்று கலகலக்க வைக்கிறது.


கோமாவில் இருந்து எழுந்திருக்கும் ஜெயம் ரவி இது எந்த வருஷம் எனக் கேட்கிறார். அதற்கு யோகிபாபு 2016, நம்பலான இங்க பார் என டிவியை ஆன் செய்கிறார். அதில் ரஜினிகாந்த் நான் அரசியலுக்கு வருவது உறுதி என ஒரு மேடையில் பேசுகிறார். அதைப் பார்த்து குழப்பத்துடன் ஜெயம் ரவி, ஏய் இது 96, யாரை ஏமாத்தறீங்க,” என்கிறார்.


ரஜினியின் அரசியல் பிரவேசத்தை கடுமையாக கலாய்த்திருக்கும் இந்த டிரைலருக்காக அடுத்து யார் யாரெல்லாம் மன்னிப்பு கேட்கப் போகிறார்களோ...???...


Advertisement
கருத்துகள் (36) கருத்தைப் பதிவு செய்ய
சிவாஜியின் புகழ்பெற்ற படத் தலைப்பு தனுசுக்கு கிடைக்குமா?சிவாஜியின் புகழ்பெற்ற படத் தலைப்பு ... இறுதிகட்டத்தில் சங்கத்தமிழன் இறுதிகட்டத்தில் சங்கத்தமிழன்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (36)

Siva - Aruvankadu,இந்தியா
05 ஆக, 2019 - 16:07 Report Abuse
Siva ரஜினி.. எந்த ஒரு ஆளுமை திறன் இல்லாதவர்... அடிக்கடி இமயமலை சென்று வருகிறார்... விட்டால் அங்கேயே தங்கி விடுவர்... ஆனால் பணம் சம்பாதிக்க வேண்டுமே. பெரிய ஞானி போலவும் தமிழ் மக்கள் அவரது வருகைக்கு காத்து கொண்டு இருப்பது போலவும் பில்டப் செய்கிறார்கள்.. எல்லாம் பணத்துக்காக...
Rate this:
Suman - Mayiladuthurai ,இந்தியா
05 ஆக, 2019 - 10:35 Report Abuse
Suman பொறுப்பில்லாத கோமாளித்தனம்...ஜெயம் ரவி எப்படி இப்படி கிண்டல் செய்ய ஒத்துக்கொண்டார் என்றே புரியவில்லை.
Rate this:
ஸ்ரீதேவி - தூத்துக்குடி,இந்தியா
05 ஆக, 2019 - 10:34 Report Abuse
ஸ்ரீதேவி ரஜினி அரசியலுக்கு வருவேன்னு அந்த சமயம் சொல்லவேயில்லை. ஜெயலலிதா மீண்டும் அரசியலுக்கு வரக்கூடாதுன்னுதான் சொன்னார். மீடியாக்கள்தான் அரசியலுக்கு வந்து விடுவார்னு ஹேஸ்யமாக கணித்தனர். அதற்கு அண்ணாமலை, முத்துன்னு சினிமா வசனங்களை துணைக்கு வைத்துக் கொண்டு விதவிதமான கட்டுரைகள் எழுதினர். 96ல் ஜெ வேண்டாம்னு அரசியல் பேசினார். 99 ல் மீண்டும் திமுக ஆதரவாக பேசினார். 2003 ல் நதிநீர் இணைப்பு அவசியம்னு அரசியல் போராட்டம் நடத்தினார். 2004 ல் பிஜேபி க்கு ஓட்டு போட்டதாக சொன்னார். இவ்வளவு தான் அவர் பகிரங்கமாக அரசியல் பேசியது. மீடியாக்களின் கற்பனைகளும், சினிமா வசனங்களும் தான் மற்றவை. கோமாளி பட இந்த கிண்டல் தவறான பார்வை
Rate this:
Vasanth Kumar - Chennai,இந்தியா
05 ஆக, 2019 - 10:14 Report Abuse
Vasanth Kumar அய்யா இது ஊர் அறிந்த உண்மை இதில் என்ன கிண்டல்
Rate this:
05 ஆக, 2019 - 08:50 Report Abuse
மட்டி நகைச்சுவையை நகைச்சுவையாய் பாருங்கள் ...ரஜினி முத்து படத்திலிருந்து பாபா வரை அரசியல் ஆழம் பார்த்து கொண்டிருந்தார் ...குபேரனில் டைரக்டர் பேச சொன்னார் பேசினேன்னு பல்டி அடித்தார் ...இதெல்லாம் இல்லன்னு சொல்ல முடியுமா ..அது ஒரு ஜோக் அவ்வளவு தான் ...
Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
05 ஆக, 2019 - 11:15Report Abuse
Mirthika Sathiamoorthiஹாரா ஹாரா மகாதேவியும், இருட்டறையில் முரட்டு குத்தும் நகைச்சுவையை நகைச்சுவையாக பார்க்காமல் கலாசார சீரழிவாக ஏன் பாத்தோம்? அந்த படத்தில் இடம் பெற்ற காட்சிகளும் ஒரு ஜோக் தானே? ஏன் ஜோக்கா எடுத்துக்க முடியலை? நம்ம வீட்டு பெண் பிள்ளைகளை ஏன் அந்த ஜோக்கை பாக்க அனுப்பலை? எதை நீங்க ஜோக்கா எடுத்துக்கறீங்க எதை சீரியசா எடுத்தகரீங்க உங்களுக்கே புரியவே மாட்டேங்குது...இதுல எங்களுக்கு அட்வைஸ் வேற......
Rate this:
மேலும் 30 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in