Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அவதூறு பேட்டி : மன்சூரலிகான் மீது புதிய வழக்கு

02 ஆக, 2019 - 10:38 IST
எழுத்தின் அளவு:
Case-file-against-actor-Mansooralikhan

நடிகர் மன்சூரலிகான் மீது அவதூறாகவும், அரசுக்கு எதிராகவும் பேசியதாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இது தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அவர் ஜாமினில் விடுதலை ஆனார்.

இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் மத்திய அமைச்சர் அமித்ஷா, இந்திய ராணுவம் பற்றி அவதூறான கருத்துக்களை வெளியிட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இந்த மக்கள் முன்னணி அமைப்பாளர் நாராயணன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகார் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:

பாலியல் புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள முகிலனுக்கு ஆதரவாக நடிகர் மன்சூரலிகான் தன் வீட்டில் வைத்து அளித்த பேட்டியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை ஒருமையில் திட்டினார். தமிழக போலீஸ், இந்திய ராணுவம் குறித்து அவதூறான கருத்துக்களை வெளியிட்டார். இனி தேர்தலில் ஓட்டு பெட்டியை உடைப்போம் என்று கூறியுள்ளார். இது பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், கலவரத்தை தூண்டும் வகையிலும் உள்ளது. எனவே அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த புகார் மனுவை கமிஷனர் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு அனுப்பினார். அவர்கள் மன்சூரலிகான் மீது அவதூறாக பேசுதல், கலவரத்தை தூண்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளார். இந்த வழக்கில் அவர் இன்னும் சில நாளில் கைது செய்யப்படலாம் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
நடிகர் சங்க தேர்தல் முடிவு வெளியிட கோர்ட் தடைநடிகர் சங்க தேர்தல் முடிவு வெளியிட ... படப்பிடிப்பில் நடிகர் சுதீப் காயம் படப்பிடிப்பில் நடிகர் சுதீப் காயம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
05 ஆக, 2019 - 13:27 Report Abuse
Vasudevan Srinivasan நடிச்சமா சம்பாதிச்சமா செட்டிலானமா என்று இல்லாமல் ஏன் இப்படி பெயரை கெடுத்துக்கொள்கிறாரோ..
Rate this:
Man -  ( Posted via: Dinamalar Android App )
03 ஆக, 2019 - 11:09 Report Abuse
Man Loosukhan
Rate this:
02 ஆக, 2019 - 12:29 Report Abuse
Satheesh Kumar pudinga sir ivanvungal noyya pudainga.. peria samooka sevakar.. tharuthala... chumma Evan kittayavuthu anchu patthu vangittu koova vanthutan
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Seeru
  • சீறு
  • நடிகர் : ஜீவா
  • நடிகை : ரியா சுமன்
  • இயக்குனர் :ரத்ன சிவா
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Dagalti
  • டகால்டி
  • நடிகர் : சந்தானம்
  • நடிகை : ரித்திகா சென்
  • இயக்குனர் :விஜய் ஆனந்த்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in