விஜய்யுடன் நடிக்கும் குழந்தை நட்சத்திரங்கள்! | 'அடடே சுந்தரா' டிரைலர் மே 30ல் வெளியீடு | ஆக் ஷனில் அசத்தும் அக்னிச் சிறகுககள் டீசர் | வீர சாவர்க்கரை அப்படியே பிரதிபலிக்கும் ரன்தீப் | குறும்படத்தில் நடித்த எஸ்.ஏ.சந்திரசேகர் | பாடி பில்டரை மணந்தார் ஸ்ருதி | வருமானவரி வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய எஸ்.ஜே.சூர்யாவின் மனு தள்ளுபடி | என்டிஆர் நூற்றாண்டு விழா தொடங்கியது: ஜூனியர் என்டிஆர் அஞ்சலி | 2021 கேரள அரசு விருதுகள் அறிவிப்பு : சிறந்த நடிகர் பிஜூமேனன், சிறந்த நடிகை ரேவதி | புதுச்சேரியில் சிவகார்த்திகேயன் பட பாடல் படப்பிடிப்பு |
நடிகர் சிம்பு, முன்னாள் காதலியான நடிகை ஹன்சிகாவுடன் இணைந்து மஹா படத்தை கிட்டத்தட்ட முடித்து விட்டார். இதையடுத்து, கவுதம் கார்த்திக் உடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் வெங்கட் பிரபுவின் மாநாடு படத்திலும் நடிக்க ஒப்புக் கொண்டிருந்தார். ஆனால் படப்பிடிப்பு தள்ளி போய்க் கொண்டே இருக்கிறது. வெங்கட் பிரபு, வெப் சீரிஸ் இயக்க போய்விட்டார்.
இந்நிலையில் சிம்பு, குடும்பத்தோடு தாய்லாந்து நாட்டுக்குச் சென்றிருக்கிறார். அப்பா டி.ராஜேந்தர், அம்மா உஷா, தம்பி குறளரசன், அவர் மனைவி, தங்கை இலக்கியா அவரது கணவர் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுடன் தாய்லாந்து சென்றிருக்கும் சிம்பு, அங்கு பல பகுதிகளுக்கும் சென்று சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்கிறார். இதை, அவரே சமூக வலைதளம் மூலம் போட்டோக்களுடன் செய்தியாக பதிவிட்டிருக்கிறார்.