பாலிவுட் படங்களை புறக்கணிக்கும் கிரித்தி ஷெட்டி | மராட்டிய மொழி படத்தில் ஷான்வி | சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி | 200 ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்தேன்: அமெரிக்க நடிகை அதிர்ச்சி தகவல் | கணவன் வீட்டில் அனுபவித்த கொடுமைகள்: மனம் திறந்தார் மகேஸ்வரி | அப்பு நினைவாக ஆம்புலன்ஸ் வழங்கிய பிரகாஷ்ராஜ் | ஹீரோயின் ஆன மாலாஸ்ரீ மகள் | கணவர் இழப்பிலிருந்து மீண்டு வந்த மீனா | 14 வருடங்களுக்குப் பின் மீண்டும் விஜய் படத்தில் த்ரிஷா? | ஆமீர்கான் படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகியது ஏன்? நாக சைதன்யா கொடுத்த விளக்கம் |
இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் நடித்திருந்தார் ஹரிஷ் கல்யாண். அவரின் அந்தப் படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அவர், தனுசு ராசி நேயர்களே என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில், இந்தியில் எடுக்கப்பட்ட விக்கி டோனார் என்ற படம் வெற்றி பெற்றது. அதை தமிழில் தாராள பிரபு என பெயரிட்டு, ரீ-மேக் செய்கின்றனர். அந்தப் படத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்கிறார். கிருஷ்ணா மாரிமுத்து இயக்குகிறார். விக்கி டோனார் படத்தில் ஆயுஷ்மான் குரானா நடித்த கேரக்டரில் ஹரிஷ் கல்யாண் நடிக்கிறார். அதேபோல, யாமி கவுதம் கேரக்டரில் யாரை நடிக்க வைக்கலாம் என படக் குழுவினர் நீண்ட ஆலோசனையில் ஈடுபட்டனர்.
பல நடிகைகள், ஆலோசனையின் போது பரிந்துரைக்கப்பட்டு, எல்லோரும் நிராகரிக்கப்பட்டனர். இறுதியில், நடிகை தான்யா ஹோப், யாமி கவுதம் கேரக்டரில் நடிக்க தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற தடம் படத்தில், அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் தான்யா. சவாலான இந்தக் கேரக்டர் தான்யாவுக்கு கிடைத்திருப்பது, அவருக்கு பெரும் மகிச்சியை ஏற்படுத்தி இருக்கிறதாம்.