அக்., 5ல் ‛லியோ' டிரைலர் வெளியீடு | வாழை படத்தை எதிர்பார்க்கும் திவ்யா துரைசாமி | 'லியோ' வெளியீட்டிற்குப் பிறகு 'விஜய் 68' பூஜை புகைப்படங்கள் | சர்வதேச திரைப்பட விழாக்களில் ஸ்ருதிஹாசனின் ‛தி ஐ' ஹாலிவுட் படம் | ரஜினி 170வது படத்தில் இணைந்த ரித்திகா சிங் | ‛சித்தா' மிகச்சிறந்த சினிமா : கோவையில் சித்தார்த் நம்பிக்கை | விஜய் 68ல் உள்ள முதல் பாடலின் சிறப்பு அம்சம் | ஒன் டூ ஒன் முதல் பார்வை வெளியீடு | ரஜினி படத்தில் இணைந்தார் துஷாரா விஜயன் | அக்டோபர் 6ல் வெளியாகும் அயலான் பட டீசர் |
நடிகர் அஜித் நடிக்க, போனிக் கபூர் தயாரிக்க, வினோத் இயக்க பிரம்மாண்ட படமாக எடுக்கப்பட்டிருக்கிறது நேர் கொண்ட பார்வை. இதில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடிகை வித்யா பாலன் நடித்திருக்கிறார். படத்தில் ஆதிக் ரவிச்சந்திரன், ஆண்ட்ரியா, ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்தியில் அமிதாப்பச்சன் நடித்த பிங்க் படத்தை தழுவி எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படம், வரும் ஆக., 8ல் ரிலீசாகிறது.
இதனால், தமிழகம் முழுவதும் இருக்கும் அனைத்து தியேட்டர்களிலும் நேர் கொண்ட பார்வை படம் திரையிடப்படும் என தெரிகிறது. இந்நிலையில், நடிகர் விக்ராந்த் நடித்திருக்கும் பக்ரீத் படத்தை, நடிகர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம், வாங்கி இருக்கிறது. அஜித் படம் ரிலீசாகும் நாளுக்கு அடுத்த நாள் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
தன்னுடைய செல்வாக்கில், நேர் கொண்ட பார்வையைத் தாண்டி, தியேட்டர்களை பெறும் முயற்சியில் இருக்கிறார் உதயநிதி. அப்படியே தியேட்டர்கள் கிடைத்து, நேர் கொண்ட பார்வையோடு, பக்ரீத் படம் ரிலீஸ் ஆனாலும், அந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இருந்தாலும், படம் திட்டமிட்டப்படி வெளியிடப்படும் என நடிகர் உதயநிதி தெரிவித்துள்ளதால், நடிகர் அஜித் படத்துடன் மோதி விக்ராந்த படம் ஜெயிக்குமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.