என்மகள் மீரா மிகவும் அன்பானவள் தைரியமானவள்: விஜய் ஆண்டனி | அர்ஜுன் தாஸிற்கு பதிலாக ஆரவ் | உலகின் மிக அழகான பெண்ணுடன் நான் - அசோக் செல்வன் வெளியிட்ட பதிவு! | ராதே ஷ்யாம் இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | திடீரென்று ஹேர் ஸ்டைல் மாற்றிய எமி ஜாக்சன்! | திருமணம் பற்றிய செய்தி - வதந்தி என ‛லியோ' ஸ்டைலில் த்ரிஷா பதில் | 'விக்ரம், பிஎஸ் 2, ஜெயிலர்,' படங்கள் ஹிந்தியில் வரவேற்பு பெறாதது ஏன் ? | பாலிவுட்டில் தாக்கு பிடிப்பாரா ராஷ்மிகா? | பிரம்மானந்தம் கதை நாயகனாக நடிக்கும் 'கீடா கோலா' | கடற்கரை மணலால் கஷ்டப்பட்டேன்: பிரியதர்ஷினி அருணாசலம் |
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டிருக்கும் நடன இயக்குநர் சாண்டி, அனைவருக்கும் பிடித்தவராக இருக்கிறார். இந்நிலையில், அவர் குறித்து இயக்குநர் வசந்த பாலன், டுவிட்டரில் பதிவு போட்டிருக்கிறார்.
அந்த பதிவில் இயக்குநர் வசந்த பாலன் கூறியிருப்பதாவது: நடன இயக்குநர் சாண்டியை நான் அறிந்ததில்லை. ஜெயில் திரைப்படத்தில் ஒரு நடனக் காட்சி இருந்தது. இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ், படத்தில், நடன இயக்குநராக யாரை போடப் போகிறீர்கள் என்று கேட்டார். பட்ஜெட்டுக்குள் யார் வருகிறார்கள் என்று பார்த்து போட வேண்டும் என்றேன்.
'சர்வம் தாள மையம்' திரைப்படத்தில் சாண்டி திறமையாக நடனக் காட்சிகள் அமைத்தார் என்று பரிந்துரை செய்தார். இசையமைப்பாளரைத் தாண்டி இப்ப ஹீரோ வேற.., அவர் சொல் தட்ட முடியுமா. உடனே சாண்டியிடம் பேசுங்கள் என்று, என் தயாரிப்பு மேலாளரிடம் கூறினேன்.
நம் பட்ஜெட்டுக்குள் வருவாரா என்று கேட்கச் சொன்னேன். சாண்டி, எந்த நிபந்தனையின்றி எங்கள் பட்ஜெட்டிற்குள் எல்லாவற்றுக்கும் சம்மதித்தார். படப்பிடிப்புக்கு முன், இரண்டு முறை சந்தித்தேன். நடனக் காட்சியை விவரித்தேன். அமைதியாக பதிலுரைத்தார். படப்பிடிப்பிலும் அமைதியாக தன் வேலையை பார்த்து கொண்டிருப்பார். நான் தான் அதிகம் கத்திக் கொண்டு இருந்தேன். அந்த நாட்களில், எனக்கு அவரை பற்றி எந்த மதிப்பீடும் உருவாகவில்லை. இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சி பார்க்கும் போது எத்தனை ஜனரஞ்சகமான கலைஞன் என்று தோன்றுகிறது. வாழ்த்துகள் சாண்டி. வென்று வாருங்கள். ஜெயில் காத்திருக்கிறது.
இவ்வாறு வசந்த பாலன் கூறியிருக்கிறார்.