ரஜினிகாந்துடன் ஆஸ்திரேலியா நாட்டு தூதர் சந்திப்பு | லாவண்யா - வருண் தேஜ் திருமணம் இத்தாலி நாட்டில் ? | என் கண்ணீரை துடைத்தார், என்னை தாங்கி நின்றார் : காதலரின் போட்டோவை பகிர்ந்து இலியானா நெகிழ்ச்சி | 'விடுதலை 2' : மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பம் ? | மீண்டும் தள்ளிப் போகும் வாடிவாசல் | சத்தமில்லாமல் புதிய படத்தில் நடித்து வரும் கவின் | பாலகிருஷ்ணாவின் 109வது படத்தின் அறிவிப்பு வெளியானது | வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டு : சின்மயி போன்று தைரியமாக வெளியே சொல்லணும் - பாடகி புவனா சேஷன் | நடிகை ரோஜா மருத்துவமனையில் அனுமதி | பவன் கல்யாண் படத்தில் நடிக்கும் அர்ஜுன் தாஸ் |
கடந்த வெள்ளியன்று விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஜோடி இணைந்து நடித்த 'டியர் காம்ரேட்' படம் வெளியானது. இளம் கிரிக்கெட் வீராங்கனையின் லட்சியம், கிரிக்கெட் தேர்வுக் கமிட்டியின் அதிகார துஷ்பிரயோகம், இவற்றின் ஊடாக ஒரு காதல் என கலந்துகட்டி படமாக்கி ரசிகர்களை கவர முயற்சித்துள்ளார்கள்.. படம் ஒகே தான் என்றாலும் படத்தின் நீளம், குறிப்பாக க்ளைமாக்ஸுக்கு முந்தைய காட்சிகள் ரொம்பவே நீளமாக இருப்பதாக பெரும்பாலான ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்..
இதனை கவனத்தில் எடுத்துக் கொண்ட தயாரிப்பு நிறுவனம், தற்போது இழுவை என கருதப்படும் 13 நிமிட காட்சிகளை படத்திலிருந்து நீக்கியுள்ளனர். மேலும் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, இதுவரை படத்தில் இடம்பெறாத கேண்டீன் பாடலையும் தற்போது படத்தில் இணைத்துள்ளனர்.. நேற்று மாலை காட்சியில் இருந்து இந்த திருத்தங்கள் செய்யப்பட படம் தியேட்டர்களில் திரையிடப்பட்டு வருகிறது.