ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் உருவாகும் 1947 | கன்னடத்தில் திரிஷ்யம் 2 : பி வாசு இயக்குகிறார் | அகோரியாக அதிரவைக்கும் பாலகிருஷ்ணா | ரிலீஸ் தேதியுடன் ஜூனியர் என்டிஆரின் புதுப்பட அறிவிப்பு | ராதே ஷ்யாம் புதிய போஸ்டர் வெளியீடு | கர்ணன் - தவறை சுட்டிக்காட்டிய உதயநிதி | கொரோனாவிலிந்து மீண்டுவிட்டோம் - மாதவன் | சாந்தி வாழ்க்கை படம் துவங்கியது | தனுஷிற்கு ஜோடியாகும் உப்பெனா நாயகி | கபடி பயிற்சியில் துருவ் விக்ரம் |
பிரேமம் படம் மூலம் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் அனுபமா பரமேஸ்வரன். அதைத் தொடர்ந்து தமிழில் தனுஷுடன் கொடி படத்தில் நடித்தவர், தற்போது தெலுங்கு திரையுலகில் முழுமூச்சாக கவனம் செலுத்தி வருகிறார். கடந்த வருடம் தமிழில் வெளியாகி ஹிட்டான ராட்சசன் படத்தின் தெலுங்கு ரீமேக்காக உருவாகியுள்ள 'ராட்சசடு' படத்தில், அமலாபால் நடித்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அனுபமா பரமேஸ்வரன்.
விரைவில் வெளியாகவுள்ள இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கெடுத்து வரும் அனுபமா பரமேஸ்வரன், ராம்சரண் நடிப்பில் வெளியாகி ஹிட்டான ரங்கஸ்தலம் படத்தில் சமந்தாவிற்கு முன்பாக கதாநாயகியாக நடிக்க தன்னைத்தான் அணுகினார்கள் என்று ஒரு புதிய தகவலை வெளியிட்டுள்ளார்..
அந்த சமயத்தில் தான் வேறு சில படங்களில் ஒப்பந்தம் ஆகி இருந்ததால் ரங்கஸ்தலம் படத்தில் நடிக்க முடியாமல் போனதில் தனக்கு வருத்தம் தான் என்றும் அதே சமயம் அந்த படத்தில் அந்த ராமலட்சுமி கதாபாத்திரத்திற்கு சமந்தா தான் பொருத்தமாக இருந்தார் என்றும் கூறியுள்ளார் அனுபமா பரமேஸ்வரன்