என்மகள் மீரா மிகவும் அன்பானவள் தைரியமானவள்: விஜய் ஆண்டனி | அர்ஜுன் தாஸிற்கு பதிலாக ஆரவ் | உலகின் மிக அழகான பெண்ணுடன் நான் - அசோக் செல்வன் வெளியிட்ட பதிவு! | ராதே ஷ்யாம் இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | திடீரென்று ஹேர் ஸ்டைல் மாற்றிய எமி ஜாக்சன்! | திருமணம் பற்றிய செய்தி - வதந்தி என ‛லியோ' ஸ்டைலில் த்ரிஷா பதில் | 'விக்ரம், பிஎஸ் 2, ஜெயிலர்,' படங்கள் ஹிந்தியில் வரவேற்பு பெறாதது ஏன் ? | பாலிவுட்டில் தாக்கு பிடிப்பாரா ராஷ்மிகா? | பிரம்மானந்தம் கதை நாயகனாக நடிக்கும் 'கீடா கோலா' | கடற்கரை மணலால் கஷ்டப்பட்டேன்: பிரியதர்ஷினி அருணாசலம் |
நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார். தெலுங்கில் சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கான ஆதித்ய வர்மாவில் அவர் நடித்து வருகிறார். பல பஞ்சயாத்துகளுக்கு பிறகு இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எம்ஓபி வைஷ்ணப் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துருவ் கலந்துகொண்டார். அப்போது எக்கச்சக்கமான மாணவிகள் அவரை சூழ்ந்து கொண்டனர்.
மாணவிகள் வெள்ளத்தை கடந்து மேடை ஏறிய துருவ், கோலமாவு கோகிலா படத்தில் இடம்பெற்ற கல்யாண வயசு தான் வந்துடிச்சுடி பாடலை பாடி அசத்தினார். மாணவிகள் உற்சாகமாக கைத்தட்டி துருவ் விக்ரமை பாராட்டினர்.
நடிகர் விக்ரமும் அருமையாக பாட்டு பாடக்கூடியர். அப்பாவுக்கு தப்பாத பிள்ளையாக துருவ்வும் பாட்டு பாடி அசத்தியிருக்கிறார். ஆனால் மாணவிகள் மத்தியில் கல்யாண வயசு தான் வந்துடிச்சுடி பாடலை துருவ் பாடியது, ஏதாவது மறைமுகு குறியீடாக இருக்குமோ என இண்டர்நெட்டில் கமெண்ட்ஸ் பறக்கிறது.